தமிழகம்

கூட்டுறவு, ரேஷன் கடைகளில் ரூ.35-க்கு வெங்காயம்: விற்பனையை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

செய்திப்பிரிவு

சென்னை: வெளிச் சந்​தை​யில் விலை உயர்வை கட்​டுப்​படுத்​தும் வகை​யில், கூட்​டுறவு அங்​காடிகள், ரேஷன் கடைகளி்ல் ரூ.35 மானிய விலை​யில் ஒரு கிலோ வெங்​கா​யம் வழங்​கும் திட்​டத்தை அமைச்​சர்​கள் நேற்று தொடங்கி வைத்​தனர்.

வெளிச் சந்​தை​யில் வெங்​கா​யம் விலை உயர்ந்து வரு​வதைக் கட்​டுப்​படுத்​த​வும், ஏழை, நடுத்​தரக் குடும்​பங்​களின் பொருளா​தா​ரச் சுமை​யைக் குறைக்​க​வும் தமிழக அரசு பல்​வேறு நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது.

இதற்​காக, தேசிய வேளாண்மை கூட்​டுறவு விற்​பனை இணை​யம் (NAFED), தேசி​யக் கூட்​டுறவு நுகர்​வோர் கூட்​டமைப்பு (NCCF) ஆகியவை மூலம் முதல்​கட்​ட​மாக மகா​ராஷ்டிர மாநிலம் நாசிக்​கில் இருந்து 1,000 டன் வெங்​கா​யத்தை தமிழக அரசு கொள்​முதல் செய்​துள்​ளது.

இந்​நிலை​யில், கிலோ ரூ.35 என்ற மானிய விலை​யில் ஒரு குடும்ப அட்​டைக்கு ஒரு கிலோ வெங்​கா​யம் நேற்று முதல் விற்​பனை செய்​யப்​படு​கிறது.

சென்னை ஆழ்​வார்​பேட்டை டிடிகே சாலை​யில் உள்ள நியாய​விலைக் கடை​யில் முதல் விற்பனையை தமிழக உணவுத் துறை அமைச்​சர் வெங்​கடரமணன், கூட்​டுறவுத் துறை அமைச்​சர் காந்​தி​ராஜன் ஆகியோர் தொடங்கி வைத்​தனர்.

கூட்டுறவு, உணவு, நுகர்​வோர் பாது​காப்​புத் துறைச் செயலர் பி.அ​மு​தா, கூட்​டுறவு சங்​கங்​களின் பதி​வாளர் ஜி.லதா உள்​ளிட்​டோர் உடன் இருந்​தனர்.

8,914 கடைகள்

தமிழகம் முழு​வதும் நகர்ப்​புறப் பகு​தி​களில் உள்ள நியாய​விலைக் கடைகள், மாவட்ட நுகர்​வோர் கூட்​டுறவு மொத்த விற்​பனைப் பண்டக சாலைகள், பிரதம கூட்​டுறவு பண்டக சாலைகள், தமிழ்​நாடு நுகர்​பொருள் வாணிபக் கழகத்​தால் நடத்​தப்​படும் சில்​லறை விற்​பனை நிலை​யங்​கள், பண்ணை பசுமைக் கடைகள் உட்பட மொத்​தம் 8,914 கடைகள் மூலம் பொது​மக்​களுக்கு வெங்​கா​யம் விற்​பனை செய்​யப்​படும்.

இதன்​மூலம் பொது​மக்​களுக்கு தரமான வெங்​கா​யம் குறைந்த விலை​யில் தடை​யின்​றிக் கிடைப்​பது உறுதி செய்​யப்​படு​கிறது.

நகர்ப்​புறப் பகு​தி​களில் உள்ள பொது​மக்​கள் அனை​வரும் தங்​களுக்​குரிய நியாய​விலைக் கடைகளை அணுகி, கிலோ ரூ.35 என்ற மானிய விலை​யில் வெங்​கா​யத்​தைப் பெற்று பயனடை​யு​மாறு தமிழக அரசு தெரி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT