தமிழகம்

வெளி மாநிலத்துக்கு ஆம்னி பேருந்து 18 நாட்களுக்குப் பிறகு இயக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: போக்​கு​வரத்​து துறை அமைச்​சர் சிவசங்கருடன் நடத்த பேச்​சில் உடன்​பாடு ஏற்​பட்​ட​தால், வெளி மாநிலங்​களுக்கு ஆம்னி பேருந்​துகள் 18 நாட்​களுக்​கு பிறகு நேற்​று​முதல் மீண்​டும் இயக்​கப்​பட்​டன.

தமிழகத்​தில் இருந்து கடந்த 7-ம் தேதி கேரள மாநில எல்​லையை அடைந்த தமிழக ஆம்னி பேருந்​துகளுக்கு அந்த ​மாநில போக்​குவரத்து அதி​காரி​கள், ரூ.70 லட்​சம் வரை அபராதம் விதித்​தனர். இதற்கு எதிர்ப்பு தெரி​வித்​து, அனைத்து ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் சங்​கத்​தினர் தொடர்ந்து நடத்​திய போராட்​டத்​துக்​கு, மற்ற மாநில ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​களும் ஆதரவு தெரி​வித்​தனர். சென்னை - திரு​வனந்​த​புரம், பெங்​களூரு உட்பட பல்​வேறு இடங்​களுக்கு இயக்க வேண்​டிய 230 ஆம்னி பேருந்​துகள் நிறுத்​தப்​பட்​டன.

இதையடுத்து, போக்​கு​வரத்​து துறை அமைச்​சர் சிவசங்​கர், போக்​கு​வரத்து ஆணையர் ஆகியோரை ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் சந்​தித்து கோரிக்கை வைத்​​தனர். இந்த ​கோரிக்​கையை அரசு பரிசீலனை செய்து வந்​தது.

இதற்​கிடையே, தமிழக போக்​கு​வரத்து அமைச்​சர் சிவசங்​கருடன் நடந்த பேச்​சில் உடன்​பாடு ஏற்​பட்​டது. இதைத் தொடர்ந்​து, தமிழகத்​தில் இருந்து வெளி​மாநிலங்​களுக்கு இடையே​யான, ஆம்னி பேருந்​துகளின் சேவை 18 நாட்​களுக்கு பிறகு நேற்று மீண்​டும் தொடங்கியது.

இதுகுறித்​து அனைத்து ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் சங்​கத் தலை​வர் அன்​பழகன் கூறிய​தாவது: மத்​திய அரசால் உரு​வாக்​கப்​பட்ட `ஆல் இந்​தியா டூரிஸ்ட்' பர்​மிட்​டின்​படி, தமிழகத்​தில் இன்​று​வரை அண்டை மாநில பேருந்​துகளுக்கு சாலை வரி வசூலிக்​கின்றனர். எனவே, நாங்​களும் வசூலிக்​கிறோம் என கேரள, கர்​நாடக போக்​கு​வரத்து அதி​காரி​கள் கூறுகின்​றனர். இதைக் கண்​டித்து நாங்​கள் வெளி​மாநிலங்​களுக்கு இடையே​யான ஆம்னி பேருந்​துகளை நிறுத்​தினோம். எங்​களது கோரிக்​கைகள் குறித்து தமிழக போக்​கு​வரத்து அமைச்​சர் சிவசங்​கர் மற்​றும் போக்​கு​வரத்து ஆணை​யரிட​ம் பேச்சு நடத்​தப்​பட்​டது.

ஆம்னி பேருந்​துகள் நிறுத்​தத்​தால், தின​மும் ரூ.4 கோடி வரை இழப்பு ஏற்​பட்​டது. இதுவரை ரூ.84 கோடிக்கு மேல் இழப்பு ஏற்​பட்​டுள்​ளது. எங்​கள் கோரிக்​கையை பரிசீலிப்​ப​தாக​வும், முதல்​வரை சந்​தித்து ஆலோ​சனை பெற்​று, நல்ல முடிவை ஏற்​படுத்​தித் தரு​வ​தாக​வும் அமைச்​சர் உறு​தி​யளித்​துள்​ளார்.

இதற்​கிடையே, பயணி​கள், சபரிமலை ஐயப்​ப பக்​தர்​கள் நலனை​ கருத்​தில் கொண்டு வெளிமாநில ஆம்னி பேருந்​துகளை 28-ம் தேதி (நேற்று) மாலை முதல் மீண்​டும் இயக்​கு​கிறோம்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT