தமிழகம்

படப்பை | 5 வயது சிறுமியிடம் முதியவர் அத்துமீறல்: போக்சோ சட்டத்தில் கைது

செய்திப்பிரிவு

படப்பை: ​தாம்​பரம் அருகே படப்பை அடுத்த சாலமங்​கலம் பகு​தி​யில் 5 வயது சிறுமி​யிடம் பாலியல் அத்​து ​மீறலில் ஈடு​பட்​ட​தாக குற்​றம் சாட்​டப்​பட்ட 60 வயது முதி​ய​வர் போக்சோ சட்​டத்​தின் கீழ் கைது செய்​யப்​பட்​டார்.

சாலமங்​கலம் பகு​தி​யைச் சேர்ந்த கிருஷ்ணகு​மார் (60) என்​பவர் எலக்ட்​ரீஷிய​னாக பணி​யாற்றி வருகிறார். இவர், ஒரு வீட்​டில் மின்​சா​ரப் பணிக்​காக சென்​றிருந்​த​போது, தனி​யாக இருந்த 5 வயது சிறுமி​யிடம் பாலியல் சீண்​டலில் ஈடு​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.

இதுகுறித்து சிறுமி தனது பெற்​றோரிடம் தெரி​வித்​ததைத் தொடர்ந்து, கிருஷ்ணகு​மாரை கூடு​வாஞ்​சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீ​ஸார் போக்சோ சட்​டத்​தின் கீழ் கைது செய்​து நீதி​மன்ற உத்​தர​வின்​படி சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்​.

SCROLL FOR NEXT