தமிழகம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம்: கோகுல்தாஸ் ஆணைய அறிக்கை சமர்ப்பிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: கள்​ளக்​குறிச்சி கள்​ளச்​சா​ராய உயி​ரிழப்​பு​களுக்கு அதி​காரி​களின் அலட்​சி​யமே காரணம் என்று சட்​டப்​பேர​வை​யில் சமர்ப்​பிக்​கப்​பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்​தாஸ் ஆணைய அறிக்​கை​யில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

கள்​ளக்​குறிச்சி மாவட்​டத்​தில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 19, 20-ம் தேதி​களில் சட்​ட​விரோத​மாக, மெத்​த​னால் கலக்​கப்​பட்ட கள்​ளச்​சா​ரா​யத்தை குடித்​த​தில் 70 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். 161 பேர் பாதிக்​கப்​பட்​டனர். உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு ரூ.10 லட்​சம், பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க அப்​போதைய முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உத்​தர​விட்​டார்.

சிபிசிஐடி விசா​ரணை நடத்தி வந்த நிலை​யில், நீதி​மன்ற உத்​தர​வின்​படி சிபிஐ விசா​ரணைக்கு மாற்​றப்​பட்​டது இது சம்​பவத்​துக்​கான காரணங்​கள் மற்​றும் சூழ்​நிலை​கள் குறித்து விசா​ரிப்​ப​தற்​காக ஓய்வு பெற்ற நீதிபதி ப.கோகுல்​தாஸ் தலை​மை​யில் விசா​ரணை ஆணை​யம் அமைக்​கப்​பட்​டது. இந்த ஆணை​யம் விசா​ரணை நடத்​தி, தனது இறுதி அறிக்​கையை தாக்​கல் செய்​தது. அந்த விசா​ரணை ஆணை​யத்​தின் அறிக்கை சட்​டசபை​யில் சமர்ப்​பிக்​கப்​பட்​டது.

அந்த அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மெத்​த​னாலுடன் தண்​ணீர் போன்ற வேறு சில திர​வங்​கள் கலந்த கலவையை கொண்ட கள்​ளச்​சா​ரா​யத்தை அருந்​தி​யுள்​ளனர். இந்த சம்​பவத்​தில் மது​விலக்கு மற்​றும் ஆயத்​தீர்​வைத்​துறை, காவல்​துறை, மது​விலக்கு அமலாக்​கத்​துறை, வரு​வாய்த்​துறை அதி​காரி​கள் உள்​ளிட்ட அனைத்து அதி​காரி​களின் தரப்​பிலும் கடுமை​யான அலட்​சி​ய​மும், கடமை தவறிய போக்​கும் இருந்​துள்​ளது. கள்​ளச்​சா​ராய விற்​பனை அதி​க​மாக நடை​பெறும் பகு​தி​கள் என தெரிந்​திருந்​தும், ஆரம்​பத்​திலேயே உரிய முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​கள் மேற்​கொள்​ளப்​பட​வில்​லை.

குறிப்​பாக, கள்​ளக்​குறிச்​சி, சங்​க​ராபுரம் மற்​றும் கச்​சி​ராயப்​பாளை​யம் வட்​டங்​களை சேர்ந்த கிராம நிர்​வாக அலு​வலர்​கள், வரு​வாய் ஆய்​வாளர்​கள் மற்​றும் வட்​டாட்​சி​யர்​கள் இப்​பேரழி​வுக்கு பொறுப்​பான​வர்​கள். சென்​னை​யில் இருந்து கள்​ளக்​குறிச்​சிக்கு அபாயகர​மான மெத்​த​னால் வேதிப்​பொருள் கடத்தி வரப்​பட்​டதை மது​விலக்கு அமலாக்​கப் பிரிவு அதி​காரி​கள் முறை​யாக கண்​காணிக்​க​வில்​லை. கள்​ளச்​சா​ராய விற்​பனையை கட்​டுப்​படுத்த தவறிய அதி​காரி​கள் மீது விசா​ரணை நடத்த வேண்​டும்.

ஓய்​வு​பெற்ற மாவட்ட நீதிபதி தலை​மை​யில், மாவட்ட ஆட்​சி​யர் மற்​றும் மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் உள்​ளிட்ட அதி​காரி​களைக் கொண்ட சார்​பற்ற மாவட்ட அளவி​லான ஆய்​வுக் குழுவை அமைத்​து, மாதந்​தோறும் தவறிழைக்​கும் அதி​காரி​களைக் கண்​டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்​டும். கள்​ளச்​சா​ராய வியா​பாரி​களிட​மிருந்து பறி​முதல் செய்​யப்​படும் சொத்​துகள் மற்​றும் வசூலிக்​கப்​படும் அபராத தொகை​யைப் பயன்​படுத்தி பாதிக்​கப்​பட்ட குடும்​பங்​களுக்​கான மறு​வாழ்வு நிதியை உரு​வாக்க வேண்​டும்.

கள்​ளச்​சா​ரா​யத்​தால் பகு​தி​யளவு ஊனமுற்​றவர்​களுக்கு ரூ.2 லட்​சம், முழு​மை​யாக ஊனமுற்​றவர்​களுக்கு ரூ.5 லட்​சம் கூடு​தல் நிவாரணம் வழங்க வேண்​டும். கணவரை இழந்த பெண்​களுக்கு உடனே விதவை ஓய்​வூ​தி​யம் வழங்​கு​வதுடன், சுயதொழில் தொடங்க நீண்​ட​கால அடிப்​படை​யில் குறைந்த வட்​டி​யில் கடன் வசதி செய்து கொடுக்க வேண்​டும்.

ஆரம்ப சுகா​தார நிலை​யங்​கள், நகர்ப்​புற சுகா​தார மையங்​களில் தலா 5 படுக்​கை​கள் கொண்ட போதை மறு​வாழ்வு பிரி​வு​களை அமைத்​து, மருத்​துவ கல்​லூரி மருத்​து​வர்​கள் மூலம் வாரந்​தோறும் சிகிச்சை மற்​றும் ஆலோ​சனை வழங்க வேண்​டும். மது​ விற்​பனையை படிப்​படி​யாக குறைத்​து, முழு​மை​யான மது​விலக்கை செயல்​படுத்​தலாம். கள்​ளக்​குறிச்சி மாவட்​டத்​தில் தொழிற்​சாலை​கள் அமைக்​கப்பட வேண்​டும். இயற்கை மது​பான​மான கள் இறக்​கு​வது குறித்து அரசு பரிசீலிக்க வேண்​டும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT