வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத்

 
தமிழகம்

தமிழக, கர்நாடக முதல்வர்கள் சந்திப்பு பற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: அமைச்சர் வினோத் தகவல்

செய்திப்பிரிவு

கும்பகோணம்: மேகே​தாட்டு அணை விவ​காரம் தொடர்​பாக, ஆக.3-ம் தேதி தமிழக முதல்​வர் விஜய்- கர்​நாடகா டி.கே.சிவக்குமார் முதல்வர் சந்​திப்பு குறித்து தலைமை அலு​வல​கத்​தில் இருந்து அதிகாரப்​பூர்வ அறி​விப்பு வரும் என தமிழக வேளாண்​மைத் துறை அமைச்​சர் வினோத் தெரி​வித்​தார்.

கும்​பகோணத்​தில் நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறியது: எல் நினோ காலநிலை மாற்​றத்​தால் வெயில் அடிக்​கலாம், இல்​லை​யெனில் மழை பெய்​ய​லாம். அதனால், டெல்டா மற்​றும் பிற மாவட்​டங்​களில் உள்ள விவ​சா​யிகள் பாதிக்​கப்​ப​டாத வகை​யில், காலநிலைக்கு ஏற்​ற​வாறு எந்​தப் பயிர்​களை பயி​ரிடலாம் என்​பது குறித்து விரை​வில் அறி​விப்​போம் என தெரி​வித்​தார்.

அப்​போது, “மேகே​தாட்டு அணை தொடர்​பாக ஆக.3-ம் தேதி தமிழக முதல்​வர் விஜய், கர்​நாடகா முதல்​வரை சந்​திக்​கப் போவ​தாக கூறி​யிருந்​தீர்​கள். ஆனால், அது உறு​தி​யான தகவல் இல்லை என்று பள்​ளிக் கல்​வித் துறை அமைச்​சர் ராஜ்மோகன் கூறி​யுள்​ளாரே?” என செய்​தி​யாளர்​கள் கேட்​டதற்​கு, “இதுதொடர்​பாக தலைமை அலு​வல​கத்​தில் இருந்து அதி​காரப்​பூர்வ அறி​விப்பு வரும்” என வினோத் பதிலளித்​தா​ர்.

SCROLL FOR NEXT