தமிழகம்

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் நவ.3-க்குள் நிறைவேற்றாவிட்டால் போராட்டம்: செவிலியர்கள் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: ‘பணி நிரந்​தரம், ஊதிய உயர்வு உள்​ளிட்ட கோரிக்​கைகளை நவ.3-க்​குள் நிறைவேற்​றா​விட்​டால் மிகப்​பெரிய போராட்​டத்தை நடத்​து​வோம்’ என்று சென்​னை​யில் உண்​ணா​விரதத்​தில் ஈடு​பட்ட செவிலியர்​கள் தெரி​வித்​தனர்.

தமிழ்​நாடு இடைநிலை சுகா​தா​ரப் பணி​யாளர்​கள் சங்​கத்​தினர் சார்​பில் பணி நிரந்​தரம், பணி பாது​காப்​பு, ஊதிய உயர்​வு, ஊக்​கத்​தொகை உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, சென்னை எழும்​பூர் ராஜரத்​தினம் மைதானம் அரு​கில் நேற்று முன்​தினம் உண்​ணா​விரதப் போ​ராட்​டம் நடை​பெற்​றது. இதில், தமிழகம் முழு​வதும் இருந்து ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட செவிலியர்​கள் கலந்து கொண்​டனர்.

இரவு 10 மணி​யள​வில் அனைத்து செவிலியர்​களை​யும் கைது செய்ய போலீ​ஸார் முயன்​றபோது இரு தரப்​புக்கும் இடையே தள்​ளு​முள்​ளு, வாக்கு​வாதம் ஏற்​பட்​டது. சில செவிலியர்​கள் மயக்​கமடைந்​தனர். இதையடுத்​து, செவிலியர்​கள் அனை​வரும் சாலை​யில் அமர்ந்து மறியல் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

தற்​காலிக​மாக ஒத்​திவைப்பு: இதனால் அப்​பகு​தியே போர்க்​கள​மாக மாறியது. பின்னர், சுகா​தா​ரத்​துறை செயலர் பேச்​சு​வார்த்தை நடத்தி நவ.3-ம் தேதி வரை அவகாசம் கேட்​ட​தால், போராட்​டத்தை தற்​காலிக​மாக ஒத்​திவைப்​ப​தாக செவிலியர்​கள் அறி​வித்​தனர். கைது செய்​யப்​பட்ட அனை​வரும் விடுவிக்​கப்​பட்​டனர்.

இதுதொடர்​பாக சங்​கத்​தின் தலை​வர் சுந்​தரி கூறும்​போது, “சுகா​தா​ரத்​துறை கேட்​டுக் கொண்​டதையடுத்து போராட்​டம் தற்​காலிக​மாக ஒத்​திவைக்​கப்​பட்​டுள்​ளது. நவ.3-க்​குள் கோரிக்​கைகளை நிறைவேற்​ற​வில்லை என்​றால் தமிழகம் முழு​வதும் மிகப்​பெரிய அளவில் போ​ராட்​டம்​ நடை​பெறும்​” என்​று தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT