சென்னை: தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழுமத்தின் இயக்குநர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த அவசர கால மகப்பேறு, பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்களில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாகப் பணியாற்ற தகுதியான செவிலியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள் 1,695. தொகுப்பூதியமாக மாதம் ரூ.21 ஆயிரம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் நர்சிங் பாடத்தில் பிஎஸ்சி அல்லது டிப்ளமா படித்திருக்க வேண்டும்.
வயது 50-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பப் படிவம், மாவட்ட வாரியான காலியிட விவரங்களை www.nhm.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட நலவாழ்வு சங்கம், நகர நலவாழ்வு சங்க அலுவலகத்தில் டிச.4-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.