ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே சுகாதாரப் பணியாளர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: எஸ்.சத்தியசீலன்

 
தமிழகம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்: மறியலில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது

போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்​நாடு இடைநிலை சுகா​தார பணி​யாளர்​கள் சங்​கத்​தினர் சார்​பில் பணி நிரந்​தரம், பணி பாது​காப்​பு, ஊதிய உயர்வு ஊக்​கத்​தொகை உள்​ளிட்ட கோரிக்​கை​களை வலி​யுறுத்தி சென்னை எழும்பூரில் உண்​ணா​விரத போ​ராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

தமி​ழ​கம் முழு​வதும் இருந்து ஏராள​மானோர் கலந்து கொண்ட போராட்​டத்​தில் செவிலியர்​களுக்கு ஆதர​வாக, திமுக முன்​னாள் அமைச்​சர் மனோ தங்​க​ராஜ் பங்​கேற்​றார். அவர் மேடை​யில் இருக்​கும் போது, திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் முதல்​வ​ராக இருந்த போது எங்​கள் கோரிக்​கையை நிறை​வேற்​ற​வில்​லை. இன்​றைய முதல்​வர் விஜய் எங்​கள் கோரிக்​கையை நிறை​வேற்ற வேண்​டும் என்று செவிலியர்​கள் கோஷமிட்​டனர்.

சங்​கத்​தின் தலை​வர் சுந்​தரி பேசுகை​யில், “இடைநிலை சுகா​தார பணி​யாளர்​களுக்கு பணி நிரந்​தரம், ஊதிய உயர்வு வழங்க வேண்​டும். மாதம் ரூ.21,000 ஊதி​யத்​தில் எப்​படி வாழ்க்​கையை நடத்த முடி​யும். கடந்த 2023 முதல் ஊக்​கத்​தொகை வழங்​கப்​பட​வில்​லை. மற்ற மாநிலங்​களுக்கு இணை​யாக ரூ.45,000 ஊதி​யம் வழங்க வேண்​டும்.

இடைநிலை சுகா​தார செவிலியர்​களுக்கு ஊதி​யத்​துடன் கூடிய மகப்​பேறு விடுப்பு வழங்க வேண்​டும். தவெக தேர்​தல் வாக்​குறுதி அளித்​த​படி, ஒப்​பந்த பணி​யாளர்​களை பணி நிரந்​தரம் செய்ய வேண்​டும். எங்​கள் கோரிக்கை நிறை​வேறும் வரை தொடர்ந்து போராட்​டத்​தில் ஈடு​படு​வோம்” என்​றார்.

போ​ராட்​டத்​தில் பங்​கேற்ற திமுக முன்​னாள் அமைச்​சர் மனோ தங்​க​ராஜ் பேசும் போது, “சு​கா​தார பணி​யாளர்​களுக்கு சம வேலைக்கு சம உரிமை, ஊதி​யம் கிடைப்​ப​தில்​லை. இடைநிலை சுகா​தார பணி​யாளர்​களுக்கு மாதம் ரூ.21,000 தான் வழங்​கப்​படு​கிறது. ஆனால், மற்ற மாநிலங்​களில் உயர்த்தி கொடுக்​கப்​படு​கிறது. அதனால், செவிலியர்​களின் கோரிக்​கையை அரசு நிறை​வேற்றி கொடுக்க வேண்​டும்” என்​றார்.

திமுக ஆட்​சி​யிலும் செவிலியர்​கள் போ​ராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அப்​போது அவர்​களின் கோரிக்​கையை நிறை​வேற்ற எந்த நடவடிக்​கை​யும் ஏன் எடுக்​கப்​பட​வில்லை என்று மனோ தங்​க​ராஜிடம், செய்​தி​யாளர்​கள் கேள்வி எழுப்​பினர். நான் கட்சி சார்​பில் போ​ராட்​டத்​தில் பங்​கேற்​க​வில்​லை. உரிமைக்​காக குரல் கொடுக்க வந்​துள்​ளேன் என்று மனோ தங்​க​ராஜ் தெரி​வித்​தார்​.

இர​விலும் போராட்​டம் தொடர்ந்​த​தால், போராட்​டத்​தில் ஈடு​பட்​டிருந்த ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட செவிலியர்​களை போலீ​ஸார் வலுகட்​டாய​மாக கைது செய்​து, வாக​னங்​களில் ஏற்றினர். அப்​போது, இருதரப்​பினருக்​கும் இடையே வாக்​கு​வாத​மும், தள்​ளு​முள்​ளும் ஏற்​பட்​டது. இதில் போராட்​டத்​தின் ஒருதரப்​பினர் எழும்​பூர் ராஜரத்​தினம் மைதானத்​துக்கு வெளியே சாலை​யில் அமர்ந்து மறியலில் ஈடு​பட்​ட​தால் பரபரப்பு நீடித்​தது. முன்னதாக, ஆதரவு தெரி​வித்து போராட்​டத்​தில் பங்​கேற்ற முன்​னாள் அமைச்​சர் மனோதங்​க​ராஜூம் கைது செய்​யப்​பட்​​டார்.

SCROLL FOR NEXT