தாராபுரம்: தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து தாராபுரத்தில் முதல்வர் விஜய் நேற்று வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வீராச்சிமங்கலம் என்ற பகுதியில் முதல்வர் செல்வதற்கு சற்று நேரத்துக்கு முன்பாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா தொண்டர்களுடன் வாகன பேரணியாக வந்தனர். முதல்வர் வருகைக்காக அங்கு நின்றிருந்த போலீஸார் பாதுகாப்பு கருதி அவர்களை மாற்று வழியில் செல்லுமாறு அறிவுறுத்தினர்.
அப்போது நாதகவினர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்குள் முதல்வரின் வாகனம் அவ்வழியாக வரத்தொடங்கியது. இதையடுத்து, உடனடியாக நாதக வேட்பாளர் உட்பட தொண்டர்கள் 100 பேரை போலீஸார் கைது செய்து ஊதியூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். போலீஸாரை கண்டித்து நாதகவினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.