தமிழகம்

கட்டாய பணி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்வி இயக்குநரகத்தை முற்றுகையிட்டு அரசு சாரா மருத்துவர்கள் போராட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: கீழ்ப்பாக்கம் மருத்​துவ கல்வி இயக்​குநரகத்தை முற்​றுகை​யிட்​டு, அரசு சாரா மருத்​து​வர்​கள் போராட்​டம் நடத்​தினர். அரசு மருத்​துவ கல்​லுாரி​களில், முது​நிலை மருத்​துவ படிப்​பு​களில் அரசு பணி​யில் இல்​லாத மருத்​து​வர்​கள் படிக்​கின்​றனர்.

அவர்​கள் படித்து முடித்​த​பின், இரண்டு ஆண்​டு​கள் கட்​டா​யம், அரசு மருத்​து​வ​மனை​களில் பணி​யாற்ற வேண்​டும். அப்​படி பணி செய்​ய​வில்லை என்​றால், ரூ.20 லட்​சம் முதல் ரூ.40 லட்​சம் வரை பிணைத்​தொகை செலுத்த வேண்​டி​யிருக்​கும்.

இந்​நிலை​யில், அரசு பணி​யில் இல்​லாத மருத்​து​வர்​கள் 100-க்​கும் மேற்​பட்​டோர் நேற்று சென்னை கீழ்ப்​பாக்​கத்​தில் உள்ள மருத்​துவ கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​ககத்தை முற்​றுகை​யிட்​டனர்.

மருத்​துவ கல்வி இயக்கக அதி​காரி​கள் ஒருதலைபட்​ச​மாக செயல்​படு​வ​தாக கூறி கோஷமிட்​டனர். இதுதொடர்​பாக, மருத்​து​வர்​கள் கூறுகை​யில், “அரசு பணி​யில் இல்​லாத மருத்​து​வர்​கள் அரசு மருத்​துவ கல்​லுாரி​களில் படித்​தால், அவர்​கள் கட்​டா​யம் அரசு பணி​யில் இரண்டு ஆண்​டுகள் பணி​யாற்ற வேண்​டும்.

ஆனால், எங்​களு​டன் படித்த பலரை, அந்த ஒப்​பந்​தத்​தில் இருந்து விடு​வித்து விட்​டனர். அதேபோல், போ​தி​யளவு இடங்​கள் இல்லை என எங்​களது ஜூனியர் மருத்​து​வர்​களை​யும் அந்த ஒப்​பந்​தத்​தில் இருந்து விடு​வித்து விட்​டனர்.

ஆனால், எங்​களை மட்​டும் ஏன் ஒப்​பந்​தத்​தில் வைத்​திருக்​கின்​றனர் என தெரிய​வில்​லை. அதி​காரி​கள் ஒரு​வாரத்​தில் தீர்வு காண்​ப​தாக தெரி​வித்​துள்​ளனர். தீர்வு கிடைக்​க​வில்லை என்​றால் மீண்​டும் முற்​றுகை போ​ராட்​டத்​தில் ஈடு​படு​வோம்​” என்​றனர்​.

SCROLL FOR NEXT