தமிழகம்

15 சிபிஎஸ்இ, இதர வாரிய பள்ளிகள் தொடங்க என்ஓசி: 10 பள்ளிகளுக்கு தொடக்கநிலை அனுமதி ஆணை

பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் 10 தனி​யார் பள்​ளி​களுக்கு தொடக்​கநிலை அனு​மதி ஆணை​களை​யும், 15 சிபிஎஸ்இ, இதர வாரிய பள்​ளி​கள் தொடங்​கு​வதற்​கான என்ஓசி சான்​றுகளை​யும் பள்​ளிக்​கல்வி அமைச்​சர் ராஜ்மோகன் வழங்​கி​னார்.

இதுதொடர்​பாக, பள்​ளிக்​கல்​வித்​துறை நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழகத்​தில் மாநில தனி​யார் பள்​ளி​கள் இயக்​ககத்​தின் கீழ் மழலை​யர் மற்​றும் தொடக்​கப் பள்​ளி​கள், சுயநிதி பள்​ளி​கள், மெட்​ரிக் பள்​ளி​கள், சிபிஎஸ்இ மற்​றும் பிற வாரியப் பள்​ளி​கள் செயல்​படு​கின்​றன.

தனி​யார் பள்​ளி​களுக்கு தொடக்க அனு​ம​தி​யும் மற்​றும் 3 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை தொடர் அங்​கீ​கார​மும் வழங்​கப்​படு​கிறது. தற்​போது புதிய அரசு பெறுப்​பேற்ற பிறகு ஏற்​கெனவே அங்​கீ​காரச் சான்று கோரி விண்​ணப்​பித்த தனி​யார் பள்​ளி​களுக்கு எவ்​வித கால​தாமத​முமின்​றி, அங்​கீ​கார ஆணை​கள் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன.

அந்த வகை​யில், கடந்த ஜூன் 16-ம் தேதி 848 பள்​ளி​களுக்​கான அங்​கீ​கார ஆணை​களை பள்​ளிக்​கல்வி அமைச்​சர் வழங்​கி​னார்.

அதைத்​தொடர்ந்​து, ஜூலை 14-ம் தேதி (நேற்​று) 15 சிபிஎஸ்இ மற்​றும் பிற வாரிய பள்​ளி​கள் தொடங்க தடை​யின்​மைச் சான்​றும் (என்​ஓசி), 10 மெட்​ரிக் பள்​ளி​கள், மழலை​யர் மற்​றும் தொடக்​கப் பள்​ளி​களுக்கு தொடக்க அனு​மதி ஆணை​களும் என மொத்​தம் 25 ஆணைகளை சம்​பந்​தப்​பட்ட பள்​ளி​களின் தாளாளர் மற்​றும் முதல்​வர்​களிடம் அமைச்​சர் நேரடி​யாக வழங்​கி​னார்.

இந்நிகழ்வின்போது, பள்​ளிக் கல்​வித்​துறை செயலர் பி.சந்​திரமோகன், பள்​ளிக்​கல்வி இயக்​குநர் எஸ்​.கண்​ணப்​பன், தனி​யார் பள்​ளி​கள் இயக்​குநர் எஸ்.சுகன்யா ஆகியோர் உடனிருந்​தனர்.

சிபிஎஸ்இ, மற்​றும் பிற​வாரிய பள்​ளி​கள், மெட்​ரிக் பள்​ளி​கள், நர்​சரி மற்​றும் பிரைமரி பள்​ளி​கள் உள்​ளிட்ட தனி​யார் பள்​ளி​களும் தொடங்க அங்​கீ​காரம் பெற ஜூலை 1 முதல் http://tnschools.gov.in/dms என்ற இணை​யதளம் வாயி​லாக​வும், தொடர் அங்​கீ​காரம் பெற http://emis.tnschools.gov.in என்ற இணை​யதளம் வாயி​லாக​வும் ஆன்​லைனில் விண்​ணப்​பித்து அனைத்து ஆவணங்​களை​யும் உள்​ளீடு செய்து உரிய ஆணை​களை கால​தாமதமின்றி வழங்க வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்ளது.

SCROLL FOR NEXT