நாளை பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்

நாளை பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்
Updated on
1 min read

சென்னை: பத்திரப் பதிவுத்துறைத் தலைவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆடி மாதம் தொடங்க இருப்பதால், ஜூலை 16-ம் தேதி வியாழக்கிழமை கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்க பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

எனவே, அன்றைய தினம் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 டோக்கன்கள் 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 300 டோக்கன்கள், அதிகளவில் ஆவணபதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களுடன் ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 டோக்கன்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நாளை பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்
ரூ.100 கோடி பழநி கோயில் நிலம் மீட்டெடுக்கப்படும்: அறநிலையத் துறை, பத்திரப் பதிவு துறை அமைச்சர்கள் உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in