தமிழகம்

“தவெக எம்எல்ஏக்களிடம் வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கவில்லை” - அமைச்சர் ஸ்ரீநாத்

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: “தவெக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கவில்லை” என்று தமிழக அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்தார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத் சட்டப்பேரவையில் இன்று சந்தித்தார். அதைத் தொடர்ந்து சிறிது நேரம் பேசிய பிறகு புறப்பட்டார். இந்தச் சந்திப்பு தொடர்பாக அவரிடம் கேட்டதற்கு, “புதுச்சேரி முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். இந்தப் பகுதியில் சென்றதால் சந்தித்தேன்” என்றார்.

மாமல்லபுரத்தில் நடந்த தவெக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் வெள்ளை பேப்பரில் அனைத்து எம்எல்ஏக்களும் கையெழுத்து வாங்கப்பட்டதா என்று கேட்டதற்கு, “அப்படி ஏதும் வாங்கவில்லை” என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT