தமிழகம்

97 அரசு கல்லூரிகளில் உடற்கல்வி இயக்குநர்கள் இல்லை: காலியிடங்களை நிரப்ப அரசுக்கு கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் மொத்​தமுள்ள 188 அரசு கல்​லூரி​களில் 97 கல்​லூரி​களில் உடற்கல்வி இயக்​குநர் பதவி காலியாக உள்​ளது. இக்​காலி​யிடங்​களை உடனடி​யாக நிரப்ப வேண்​டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது.

இது​தொடர்​பாக அரசு கல்​லூரி ஆசி​ரியர் கழக பொதுச்​செய​லா​ளர் சோ.சுரேஷ் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் 181 கலைக் கல்​லூரி​கள், 7 கல்​வி​யியல் கல்​லூரி​கள் என மொத்​தம் 188 அரசுக் கல்​லூரி​கள் இயங்கி வரு​கின்​றன.

இவற்​றில் 97 கல்​லூரி​களில் அதாவது 50 சதவீத கல்​லூரி​களில் உடற்​கல்வி இயக்​குநர் பணி​யிடங்​கள் பல ஆண்​டுகளாக காலியாக உள்​ளன. இந்​தப் பணி​யிடங்​களை அரசு உடனடி​யாக நிரப்ப வேண்​டும். அரசு கல்​லூரி​களின் விளை​யாட்டு மேம்​பாட்​டுக்கு ஆண்​டுதோறும் நிதி ஒதுக்​கப்​பட வேண்​டும்.

மேலும் அரசு கல்​லூரி​களில் விளை​யாட்​டுகளில் ஆர்​வ​முடைய மாணவர்​களுக்கு தனி பயிற்​சி​யாளர்​களை நியமிக்க வேண்​டும். பயிற்​சிபெறும் மாணவர்​களுக்கு சிற்​றுண்டி வழங்க வேண்​டும்.

பிற கல்​லூரி​களில் நடை​பெறும் விளை​யாட்​டுப் போட்​டிகளுக்கு மாணவர்​களை அழைத்​துச் செல்​வதற்​கும், விளை​யாட்டு விழா, விளை​யாட்டுப் போட்​டிகள் நடத்​து​வதற்​கும், தேவை​யான விளை​யாட்டு உபகரணங்​கள் வாங்​கு​வதற்​கும் தேவை​யான நிதியை அரசு ஒதுக்க வேண்​டும்.

ஒவ்​வொரு ஆண்​டும் அரசு கல்​லூரி​களில் விளை​யாட்டு மேம்​பாட்​டுக்​கென குறிப்​பிட்ட நிதியை அரசு ஒதுக்​கீடு செய்​தால் ஏழை மாணவர்​கள் விளை​யாட்​டுகளில் சிறந்து விளங்​கு​வார்​கள். இவ்​வாறு அவர் கூறியுள்​ளார்.

அமைச்​சர் இன்று ஆலோ​சனை

இந்நிலையில், அரசு கல்​லூரி​களில் விளை​யாட்டு மேம்​பாட்டு செயல்​பாடுகள் குறித்து ஆலோ​சிக்க உயர்​கல்​வித்​துறை அமைச்​சர் பி.விஸ்வநாதன் தலை​மையில் உடற்​கல்வி இயக்​குநர்​களின் கூட்​டம் சென்னை பல்​கலைக்​கழக வளாகத்​தில் இன்று (அக்.23 ) பிற்​பகல் 2 மணி​யளவில் நடை​பெறுகிறது.

இதில் உயர்​கல்​வித்​துறை செயலர் தீரஜ்குமார், கல்​லூரி கல்வி ஆணை​யர் பா.பொன்​னையா மற்​றும் மண்​டல இணை இயக்​குநர்​கள் கலந்​து​கொள்​கின்​றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT