மருத்துவக் கல்வி இயக்குநராக அரவிந்த் நியமனம்: தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என அரசு மருத்துவர்கள் மகிழ்ச்சி

மருத்துவர் ஏ.அரவிந்த்

மருத்துவர் ஏ.அரவிந்த்

Updated on: 
1 min read

சென்னை: அரசு ஸ்​டான்லி மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை டீன் அர​விந்த், மருத்துவக் கல்வி இயக்​குநராக நியமனம் செய்​யப்​பட்​டுள்​ளார். இது தொடர் போராட்​டத்​துக்கு கிடைத்த வெற்றி என அரசு மருத்​து​வர்​கள் தெரி​வித்​தனர்.

தமிழக அரசின் மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​ககத்​தின் (டிஎம்இ) இயக்​குநராக சுகந்தி ராஜகுமாரி இருந்​தார்.

அவரது பத​விக்​காலம் கடந்த ஜூலை மாதத்​துடன் முடிந்​ததால், மருத்​துவ மாணவர் சேர்க்கை குழு செயலராக இருந்த லோகநாயகி, மருத்​து​வக் கல்வி இயக்​குநராக (பொறுப்பு) நியமிக்​கப்​பட்​டார்.

இதையடுத்து புதிய இயக்​குநரை தேர்வு செய்​யும் பணிகள் தொடங்​கின. அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைகளின் டீன் பொறுப்​பில் இருப்​பவர்​களைத்தான் தகுதி மற்​றும் பணி மூப்பு அடிப்​படை​யில் நியமிப்​பது வழக்​க​மாக இருந்​தது.

ஆனால், விதி​முறைகளை திருத்தி நேர்​முகத் தேர்வு என்ற பெயரில், ஓய்வு பெற்ற டீன் அந்​தஸ்திலான ஒரு​வரை வைத்து, மருத்​து​வக் கல்வி இயக்​குநரை தேர்வு செய்​யும் முறைக்கு அரசு மருத்​து​வர்​கள் எதிர்ப்பு தெரி​வித்​தனர்.

இதற்​கிடை​யில், மருத்​து​வக் கல்வி இயக்​குநர் நியமனத்​தில் தவெக அரசின் கூட்​டணி கட்சி தலை​வரின் தலை​யீடு இருப்​ப​தாகவும், அத​னால், தகுதி​யான டீன்​கள் பாதிக்​கப்​படுவ​தாகவும் தெரி​வித்த அரசு மருத்​து​வர்​கள், நியாய​மான முறை​யில் தகுதி​யான டீனை மருத்​து​வக் கல்வி இயக்​குநராக நியமிக்க வேண்​டும் என்று தமிழக அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்​தனர்.

இந்​நிலை​யில், தமிழகத்​தில் உள்ள அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைகளில் உள்ள டீன்​களில், தகுதி மற்​றும் பணி மூப்பு அடிப்​படை​யில் முதலிடத்​தில் இருந்த சென்னை அரசு ஸ்​டான்லி மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை டீன் ஏ.அர​விந்த், மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​ககத்​தின் இயக்​குநராக நேற்று நியமிக்​கப்​பட்​டார்.

இதற்​கான அரசாணையை சுகாதா​ரத்​துறை செயலர் தாரேஸ் அகமது வெளி​யிட்​டுள்​ளார். இதையடுத்து, மாலையே அவர் டீன் பொறுப்​பில் இருந்து விலகி, சென்னை கீழ்ப்​பாக்​கத்​தில் உள்ள மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​ககத்​தில் இயக்​குநராக பொறுப்​பேற்​றுக் கொண்​டார்.

மருத்​து​வக் கல்வி இயக்​குநராக அர​விந்த் நியமனம் செய்​யப்​பட்​டதற்கு வரவேற்பு தெரி​வித்​துள்ள அரசு மருத்​து​வர்​கள், தொடர் போராட்​டத்​துக்கு கிடைத்த வெற்றி என தெரி​வித்​துள்​ளனர்.

ஏ.அர​விந்த், எம்​பி​பிஎஸ் முடித்த பிறகு எம்டி படிப்​பில் பொது மருத்​து​வம், டிஎம் படிப்​பில் இரைப்பை குடல் நலத்​துறை முடித்​துள்​ளார்.

பல்​வேறு அரசு மருத்​து​வ​மனைகளில் பணி​யாற்​றிய அவர், சென்னை ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை​யில் இரைப்பை குடல் சிகிச்சை துறை இயக்​குநராகவும் ஓமந்​தூரார் அரசு மருத்து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை டீனாகவும் இருந்​து உள்​ளார்.

மருத்​து​வக் கல்வி இயக்​குநராக நியமனம் செய்​யப்​பட்​டுள்​ள ஏ.அர​விந்த் ஓராண்​டு காலம் அந்தப் பதவியில் இருப்​பார்.

<div class="paragraphs"><p>மருத்துவர் ஏ.அரவிந்த்</p></div>
வெற்றிப் பயணம் திட்டத்தில் இணைக்கக் கோரி தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in