அமைச்சர் டி.கே.பிரபு

 
தமிழகம்

“ஜெயலலிதா உத்தியை பின்பற்ற வேண்டிய தேவை முதல்வர் விஜய்க்கு இல்லை” - அமைச்சர் டி.கே.பிரபு

இ.ஜெகநாதன்

சிவகங்கை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தியை பின்பற்ற வேண்டிய தேவை, முதல்வர் விஜய்க்கு இல்லை என கனிமவளத் துறை அமைச்சர் டி.கே.பிரபு தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தொடர்ந்து உதவி மையத்தை திறந்து வைத்த அமைச்சர் டி.கே.பிரபு கூறியது: “மக்களுக்கும் முதல்வருக்குமான அன்பு பிரிக்க முடியாதவை. தமிழக மக்களும், முதல்வரும் ஒரே குடும்பம் தான். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தியை பின்பற்ற வேண்டிய தேவை முதல்வருக்கு இல்லை. அவர் எப்போதும் மக்களின் அன்பை பெற்றவர்.

கட்டாயம் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட லாரிகளில் தான் மணல் கொண்டு செல்ல வேண்டும். ஆனால், தற்போது டிராக்டர்களில் கிராவல் மண், மணல் ஏற்றி செல்கின்றனர். இதை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.

மணல் கடத்தல் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுத்த எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. மேலும், மக்களுக்கு மணல் தட்டுப்பாட்டு ஏற்படாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று அவர் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT