தமிழகம்

குடிநீர் வழங்கும் ஏரிகளில் 6 டிஎம்சி நீர் இருப்பு: சென்னையில் 6 மாதங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னைக்கு பூண்​டி, சோழ​வரம், செங்​குன்​றம், கண்​ணன் கோட்​டை- தேர்​வாய் கண்​டிகை, செம்​பரம்​பாக்​கம், வீராணம் ஆகிய ஏரி​களில் இருந்து குடிநீர் கொண்​டு​வரப்​படு​கிறது. இந்த ஏரி​களின் மொத்த கொள்​ளவு 13,222 மில்​லியன் கனஅடி.

ஜூலை 3-ம் தேதி நில​வரப்​படி, 6,139 மில்​லியன் கனஅடி நீர் (46.43 சதவீதம்) மட்​டுமே உள்​ளது. கடந்த ஆண்டு இதே தேதி​யில் 7,670 மில்​லியன் கனஅடி இருந்​தது. கடந்த ஆண்டை விட இப்​போது 1,531 மில்​லியன் கன அடி குறை​வாக உள்​ளது.

இந்த ஏரி​களில் இருந்து நேற்று சுமார் 1089 மில்​லியன் லிட்​டர் குடிநீர் மற்​றும் கடல்​நீரை குடிநீ​ராக்​கும் நிலை​யங்​கள் மூல​மாக 155 மில்​லியன் லிட்​டர் என நாளொன்​றுக்கு 1,244 மில்​லியன் லிட்​டர் குடிநீர் விநி​யோகிக்​கப்​படு​கிறது.

கடந்த ஆண்டு 1,097 மில்​லியன் லிட்​டர் குடிநீர் விநி​யோகிக்​கப்​பட்​டது. சென்​னைக்கு குடிநீர் வழங்​கும் ஏரி​களின் நீர்ப்​பிடிப்பு பகு​தி​களான காஞ்​சிபுரம் மாவட்​டத்​தில் ஜூன் மாதத்​தில் 19 சதவீதம் குறை​வாக மழை பெய்​துள்​ளது.

மாநகருக்​கான நீர்த்​தேவை கடந்த ஆண்டை விட அதி​கரித்​துள்​ளது. தற்​போது மழை​யும் குறிப்​பிடும்​படி​யாக பெய்​ய​வில்​லை. இந்த ஆண்டு எல்​நினோ ஆண்டு எனவும் வானிலை அமைப்​பு​கள் எச்​சரித்து வரு​கின்​றன. அதனால் தலைநகர் சென்​னை​யில் குடிநீர் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டு​விடுமோ என மக்​கள் மத்​தி​யில் அச்​சம் எழுந்​துள்​ளது.

இது தொடர்​பாக சென்னை குடிநீர் வாரிய அதி​காரி​கள் கூறிய​தாவது: சென்​னைக்கு குடிநீர் வழங்​கும் ஏரி​களில் தற்​போது 6 டிஎம்​சிக்கு மேல் குடிநீர் இருப்பு உள்​ளது. சென்​னைக்​கு, ஒரு மாதம் விநி​யோகிக்க 1 டிஎம்சி நீர் தேவை. அதனால் இப்​போது உள்ள குடிநீரை 6 மாதங்​களுக்கு பயன்​படுத்த முடி​யும்.

இது மட்​டுமல்​லாது, கடல்​நீரை குடிநீ​ராக்​கும் நிலை​யங்​கள் மூல​மாக நாளொன்​றுக்கு 157 மில்​லியன் லிட்​டர் குடிநீர் கிடைத்து வரு​கிறது. மேலும் கிருஷ்ணா நதி நீரை திறக்​கக்​கோரி நீர்​வளத்​துறை சார்​பில் கடிதம் கொடுக்​கப்​பட்​டுள்​ளது.

வீராணம் ஏரிக்​கும் நீரை திறந்​து​விட நீர்​வளத்​துறை நடவடிக்கை எடுத்து வரு​கிறது. அதன் பிறகு அக்​டோபரில் வட கிழக்கு பரு​வ​மழை தொடங்​கி​விடும். அதனால் அடுத்த 6 மாதங்​களுக்கு சென்​னை​யில் குடிநீர் தட்​டுப்​பாடு ஏற்​பட வாய்ப்​பில்​லை. இவ்​வாறு அதி​காரி​கள்​ கூறினர்​.

SCROLL FOR NEXT