தமிழகம்

மேகேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: உதயநிதி கோரிக்கையை திரும்ப பெற கட்சிகள் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: மேகே​தாட்டு விவ​காரத்​தில் புதிய நடு​வர் மன்​றம் தேவையற்​றது என்​றும், தீர்​மானத்​தில் சேர்த்த எதிர்க்​கட்சி தலை​வர் உதயநிதி ஸ்டா​லினின் கோரிக்​கையை திரும்​பப்​பெற வேண்​டும் எனவும் பாமக மற்​றும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிகள் வலி​யுறுத்​தி​யுள்​ளன.

இதுதொடர்​பாக, அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​:

பாமக தலை​வர் அன்​புமணி: சட்டப்பேரவையில் எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் “மேகே​தாட்டு பிரச்​சினை​களுக்​காக தனி நடு​வர் மன்​றம் அமைக்க வலி​யுறுத்த வேண்​டும்” என்ற கோரிக்​கையை முதல்​வர் ஏற்​றுக்​கொண்​டதையடுத்து அந்த யோசனையை​யும் தீர்​மானத்​தில் சேர்க்​கப்​பட்​டது.

தனி நடு​வர் மன்​றம் அமைக்​கப்பட வேண்​டும் என்ற அரசின் நிலைப்​பாட்டை ஏற்​க முடி​யாது. மேல்​மடை மாநிலங்​களான கர்​நாடகம், கேரளம் ஆகிய​வற்​றில் எந்த கட்​டு​மானங்​களை மேற்​கொள்​வ​தாக இருந்​தா​லும் கடைமடை பாசன மாநில​மான தமிழகத்​தின் அனு​மதி அவசி​யம் என்று காவிரி நடு​வர் மன்​ற​மும், உச்​சநீ​தி​மன்​ற​மும் தெளி​வாக தீர்ப்​பளித்​துள்​ளன.

அவ்​வாறு இருக்​கும் போது, மேகே​தாட்டு அணை விவ​காரத்​துக்கு தீர்வு காண புதிய நடு​வர் மன்​றம் அமைக்க வேண்​டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு திரும்ப பெறவேண்டும்.

மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம்: மேகே​தாட்டு அணை விவகாரத்தில், எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் கொடுத்த திருத்​தம் என்ன என்று பேர​வைக்கு சொல்​லாமல், அதை நாங்​கள் ஏற்​றுக்​கொண்டு தீர்​மானத்தை நிறைவேற்​றுகிறோம் என்​கிற அணுகு​முறை, சட்​டப்​பேரவை விதி​களுக்கு புறம்​பானது. எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் கொண்​டு​வந்த திருத்​தத்​துக்கு ஆதரவு இல்​லை. எனவே, நாளை (இன்​று) அவை கூடிய​வுடன், “தா​னாக முன்​வந்து இந்​தத் திருத்​தத்​தைத் திரும்​பப்பெறுகிறோம்” என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.

SCROLL FOR NEXT