தமிழகம்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நவ.13-ல் உருவாக வாய்ப்பு

இன்று 4 மாவட்டங்களில் கனமழை

செய்திப்பிரிவு

சென்னை: வங்​கக்​கடலில் நவ.13-ம் தேதி புதிய காற்​றழுத்த தாழ்வு பகுதி உரு​வாக வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இது​குறித்து தென் மண்​டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட அறிக்கை: தென்​கிழக்கு வங்​கக்​கடல் பகுதி​யில் வரும் நவ.13-ம் தேதி ஒரு காற்​றழுத்த தாழ்வு பகுதி உரு​வாகக் கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்​கடுத்த 24 மணி நேரத்​தில் ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி​யாக மாறக் கூடும்.

மேலும் மன்​னார் வளைகுடா மற்​றும் அதை ஒட்​டிய பகுதி​களின் மேல் 1.5 கி.மீ. உயரம் வரை ஒரு வளிமண்​டல சுழற்சி நில​வு​கிறது. தென்​கிழக்கு அரபிக் கடல்

மற்​றும் அதை ஒட்​டிய லட்​சத்​தீவு பகுதி​களின் மேல் 0.9 கி.மீ. உயரத்​தில் ஒரு வளிமண்​டல சுழற்சி நில​வு​கிறது. இதன் காரண​மாக இன்று (நவ.11-ம் தேதி) சிவகங்கை, ராம​நாத​புரம், தூத்​துக்​குடி மற்​றும் திருநெல்​வேலி மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இடி மின்​னல், பலத்த காற்​றுடன் கூடிய கனமழை பெய்​யக்கூடும்.

தஞ்​சை, திருவாரூர், மயி​லாடு​துறை, நாகை, புதுக்கோட்டை, திண்​டுக்​கல், மதுரை, விருது நகர், தேனி, தென்​காசி, கன்​னியாகுமரி மாவட்​டங்​களிலும் காரைக்கால் பகுதி​களி​லும் இடி மின்​னலுடன் மித​மான மழை பெய்​யக் கூடும்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT