கோப்புப் படம்

 
தமிழகம்

கள்ளர் பள்ளி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

3 நாட்களுக்குள் உயர் அதிகாரியிடம் மேல்முறையீடு செய்யலாம்

செய்திப்பிரிவு

சென்னை: கள்​ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்​களுக்​கான பொது மாறு​தல் கலந்​தாய்​வுக்கு புதிய வழி​காட்டு நெறி​முறை​கள் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளன. கலந்​தாய்​வின்​போது பாதிக்​கப்​படும் ஆசிரியர்கள் மேல்​முறை​யீடு செய்ய வாய்ப்பு அளிக்​கப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக, பிற்​படுத்​தப்​பட்​டோர், மிக​வும் பிற்​படுத்​தப்​பட்​டோர் மற்​றும் சிறு​பான்​மை​யினர் நலத்​துறை​யின் செயலர் வ.தட்​சிணா​மூர்த்தி வெளி​யிட்​டுள்ள அரசாணை: கள்​ளர் சீரமைப்பு தொடக்​கப் பள்​ளி​கள், நடுநிலைப் பள்​ளி​கள், உயர்​நிலைப் பள்​ளி​கள், மேல்​நிலைப் பள்​ளி​கள் மற்​றும் விடு​தி​களில் பணி​யாற்றி வரும் ஆசிரியர்​கள் மற்​றும் காப்​பாளர்​களுக்கு 2026-27-ம் கல்​வி​யாண்​டில் பொது மாறு​தல் வழங்​கும் கலந்​தாய்​வுக்​கான புதிய வழி​காட்டு நெறி​முறை​களை நிர்​ண​யித்து அரசு ஆணை​யிட்​டுள்​ளது.

அதன்​படி, ஒவ்​வொரு கல்வி ஆண்​டிலும் கலந்​தாய்வு நடை​பெறக்​கூடிய நாளுக்கு முந்​தைய கல்​வி​யாண்​டின் ஆகஸ்ட் 1-ம் தேதி நில​வரப்​படி ‘எமிஸ்’ இணை​யதளத்​தில் உள்ள மாணவர் எண்​ணிக்​கை​யின் அடிப்​படை​யில் ஆசிரியர்​-​மாணவர் விகி​தா​சா​ரத்​தின்​படி ஆசிரியர் பணி​யிடம் நிர்​ண​யிக்​கப்பட வேண்​டும்.

கள்​ளர் பள்​ளி​களில் ஆசிரியர்​களாக பணி​யாற்​றிவரு​வோர் பணிமூப்பு மற்​றும் சொந்த விருப்​பத்​தின் அடிப்​படை​யில் கள்​ளர் விடு​தி​யின் காப்​பாளர் அல்​லது காப்​பாளினி​யாக பணி அமர்த்​தப்பட வேண்​டும்.

பணிநிர​வலில் ஆசிரியர் இல்​லாமல் உபரி​யாக உள்ள காலிப்​பணி​யிடங்​களை பிசி, எம்​பிசி நல ஆணை​யரின் தொகுப்​புக்கு கொண்​டு​செல்ல வேண்​டும். அப்​பணி​யிடங்​களுக்கு மாறு​தல் வழங்​கக் கூடாது. உபரி ஆசிரியர் பணி​யிடங்​களுக்கு பணிநிர​வல் செய்த பின்​னரே பணி​மாறு​தல் மற்​றும் பதவி உயர்வு வழங்​கப்பட வேண்​டும்.

மாறு​தல் கோரி விண்​ணப்​பிக்​கும் ஆசிரியர்​களின் பெயர், கேட்​கும் இடம் ஆகிய விவரங்​கள் எமிஸ் இணை​யதளத்​தில் வெளி​யிடப்பட வேண்​டும். மனமொத்த மாறு​தலை பொருத்​தவரை, பொது மாறு​தல் கலந்​தாய்வு நாளன்று மாறு​தல் ஆணை​கள் வழங்​கப்பட வேண்​டும்.

ஏற்​கெனவே மனமொத்த மாறு​தல் அடிப்​படை​யில் மாறு​தல் ஆணை பெற்​றவர்​களை 2 ஆண்​டு​களுக்கு பொது மாறு​தல் கலந்​தாய்​வில் பங்​கேற்க அனு​ம​திக்​கக் கூடாது.

ஆசிரியர் தேர்வு வாரி​யம் மூல​மும், சிறப்​புத்​தேர்வு மற்​றும் நேரடி நியமனம் மூல​மும் முறை​யாக நியமிக்​கப்​பட்டு பணி​யாற்றி வரும் அனைத்து ஆசிரியர்​களும் பொது மாறு​தல் கலந்​தாய்​வில் பங்​கேற்​கலாம்.

கலந்​தாய்​வின்​போது பாதிக்​கப்​பட்ட எந்​த வொரு ஆசிரியரும் அந்த பணி முடிந்த 3 நாட்​களுக்​குள் உயர் அதி​காரிக்கு எழுத்​துப்​பூர்​வ​மாக மேல்​முறை​யீடு செய்​ய​லாம்​. இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT