அமைச்சர் ரகுபதி
படம்: எக்ஸ் தளம்.
சென்னை: “புதிய கட்சிகளை நாங்கள் அரசியல் எதிரிகளாகப் பார்க்கவில்லை. திராவிட மாடல் ஆட்சியின் கருத்துகளுக்கு எதிரானவர்களைத் தான் நாங்கள் எதிரிகளாக பார்க்கிறோம். திமுக தமிழகத்தின் அசைக்க முடியாத கட்சி” என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஒத்த கருத்துடைய கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் எனக் கூறும் எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ், தினகரனை சேர்ப்பாரா? பியூஷ் கோயலுக்கு தமிழக அரசியலின் தட்பவெப்பநிலை பற்றி தெரியாது; அவர் நினைப்பது நிச்சயம் நடக்காது.
எத்தனை முனை போட்டியாக இருந்தாலும் திமுகவை வீழ்த்த முடியாது. முதல்வர் ஸ்டாலின் 5 ஆண்டுகளாக செய்துள்ள சாதனைகள் திமுக கூட்டணிக்கு நிச்சயம் வெற்றியைப் பெற்று தரும்.
முதல்வர் ஸ்டாலினை இரண்டாவது முறையாக முதல்வர் ஆக்குவது தான் என்னுடைய கடமை, பணி என்று உதயநிதி ஸ்டாலின் தெளிவாக சொல்லிவிட்டார். அதற்காக அவர் மும்பரமாக களப்பணியாற்றி வருகிறார்.
பொங்கல் பரிசுத் தொகை எவ்வளவு என்பது ரகசியமாகத் தான் இருக்கும். திடீரென்று அறிவிக்கப்படும். அதிமுகவால் மெகா கூட்டணியை உருவாக்க முடியாது. திமுக கூட்டணியில் இருந்து ஒரு செங்கல்லை கூட உருவ முடியாது.
நாங்கள் அரசியல் எதிரிகளாக புதிய கட்சிகளை பார்க்கவில்லை. திராவிட மாடல் ஆட்சியின் கருத்துகளுக்கு எதிரானவர்களை நாங்கள் எதிரிகளாக பார்க்கிறோம். திமுக தமிழகத்தின் அசைக்க முடியாத கட்சி” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.