மீண்டும் உயர்ந்து அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை: ஒரு கிராம் ரூ.13,000-ஐ நெருங்கியது

தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலை நிலவரம்

Updated on
1 min read

சென்னை: சென்னையில் இன்று (டிச.23) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,770-க்கும், ஒரு பவுன் ரூ.1,02,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக, ஆபரணத் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.1,360 உயர்ந்ததால், ஒரு பவுன் ரூ.1,00,560 என உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கடந்த அக்.17-ம் தேதி ரூ.97,600 ஆக அதிகரித்து, புதிய உச்சத்தை தொட்டது.

அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்த நிலையில், டிச.12-ம் தேதி ரூ.98,960 ஆக உயர்ந்தது. 3 நாட்களுக்கு அதே விலை நீடித்த நிலையில், கடந்த 15-ம் தேதி பவுன் விலை ரூ.1 லட்சத்தை தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது. அன்று ஒரு கிராம் விலை ரூ.12,515, ஒரு பவுன் விலை ரூ.1,00,120 ஆக இருந்தது.

பின்னர், சற்று குறைந்த விலை கடந்த சில நாட்களாக ரூ.99,000-ஐ ஒட்டியே இருந்தது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நேற்று மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டியது. நேற்று பவுனுக்கு ரூ.1,360 உயர்ந்ததால், ஒரு பவுன் ரூ.1,00,560 என உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.

இந்நிலையில் சென்னையில் இன்று (டிச.23) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்தது. கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,770-க்கும், பவுனுக்கு ரூ.1600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,02,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 13,931 -க்கும், ஒரு பவுன் ரூ.1,11,448 -க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.10,650-க்கும், ஒரு பவுன் ரூ. 85,200 -க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை: அதே நேரத்தில் சென்னையில் இன்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ. 234 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ, 2,34,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

<div class="paragraphs"><p>தங்கம் விலை நிலவரம்</p></div>
ஏழைகளுக்குப் பயணம் எட்டாக்கனியாகும்: ரயில்களை தனியார்மயமாக்கக் கூடாது; ராமதாஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in