தமிழகம்

நுகர்வோரின் புகார்களை தீர்க்க மின்னகத்தில் ஏஐ தொழில்நுட்பத்துடன் புதிய கட்டுப்பாட்டு மையம்

மின்வாரியம் டெண்டர் வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை: மின்​நுகர்​வோர்​களின் புகார்​களுக்​குத் தீர்வு ஏற்​படுத்​தும் வகை​யில் மின்​னகத்​தில் ஏஐ தொழில்​நுட்​பத்​துடன் கூடிய புதிய கட்​டுப்​பாட்டு மையம் அமைப்​ப​தற்​கான டெண்​டரை மின்​வாரியம் வெளி​யிட்​டுள்​ளது.

தமிழ்​நாடு மின் பகிர்​மானக் கழகத்​தின் கீழ் பொது​மக்​களின் மின்​சா​ரப் புகார்​களை 24 மணி நேர​மும் கவனித்து வரும் ‘மின்​னகம்’ மையத்தை, தற்​போதைய நவீன தொழில்​நுட்ப வளர்ச்​சிக்கு ஏற்ப மேம்​படுத்த மின் வாரியம் முடிவு செய்​துள்​ளது.

இதன்​படி, செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்​துடன் கூடிய புதிய கட்​டுப்​பாட்டு மையத்தை அமைப்​ப​தற்​கான புதிய டெண்​டரை மின் வாரியம் வெளி​யிட்​டுள்​ளது.

சென்னை அண்ணா சாலை​யில் உள்ள மின் வாரியத் தலை​மையக வளாகத்​தில் உள்ள மின்​னகம் மையத்​திலேயே இந்த புதிய ஏஐ கட்​டுப்​பாட்டு மையம் அமைய​வுள்​ளது.

ஐந்து ஆண்​டுகளுக்​கான இந்​தத் திட்​டத்​தின் கீழ், பொது​மக்​கள் ஆன்​லைனில் அளிக்​கும் புகார்​களைக் கண்​காணிப்​பது, சமூக வலை​தளங்​களில் பகிரப்​படும் குறைகளைத் திரட்டி நிர்​வகிப்​பது மற்​றும் வாட்​ஸ்அப் வழி​யாக களப்​பணித் தகவல்​களை உடனுக்​குடன் ஒருங்​கிணைப்​பது உள்​ளிட்ட பல்​வேறு அதிநவீனப் பணிகள் மேற்​கொள்​ளப்​பட உள்​ளன.

இது​மட்​டுமின்றி, மின்​பாதைகளின் செயல்​பாடுகளைத் துல்​லிய​மாகக் கண்​காணிக்​கும் நவீன வசதி​யும் இந்​தத் திட்​டத்​தில் சேர்க்​கப்​பட்​டுள்​ளது.

இந்த அதிநவீனப் பணிகளை மேற்​கொள்​ளத் தகுதி​யுள்ள நிறு​வனங்​கள் தங்​களு​டைய தொழில்​நுட்​பம் மற்​றும் விலை தொடர்​பான ஆவணங்​களைத் தனித்​தனியாகச் சமர்ப்​பிக்க வேண்​டும் என தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

இதற்​கான முன்​வைப்​புத் தொகை​யாக ரூ.11.70 லட்​சம் நிர்​ணயிக்​கப்​பட்டு அடுத்த மாதத்​துக்​குள் இந்த டெண்​டர் நடை முறைகளை இறுதி செய்ய மின்​வாரியம் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இந்த புதிய ஏஐ தொழில்​நுட்ப மையம் பயன்​பாட்​டுக்கு வரும் வரை, பொது​மக்​கள் தங்​களின் மின்​சா​ரம் தொடர்​பான குறைகளை வழக்​கம்​போல 94987 94987 என்ற கைப்​பேசி எண், 1912 என்ற கட்​ட​ணமில்லா தொலைபேசி எண் மற்​றும் 94987 94981 என்ற வாட்​ஸ்அப் எண் ஆகிய தற்​போதைய வழிமுறைகள் மூலமாகத் தொடர்பு கொண்டு பதிவு செய்​ய​லாம் என மின்​வாரியம் தெரி​வித்​துள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT