சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரிக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். | படம்: ம.பிரபு |

 
தமிழகம்

உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பொறுப்பேற்பு

ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் 55-வது தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அர்​விந்த் தர்​மா​தி​காரிக்கு ஆளுநர் ஆர்​.என்​.ரவி பதவி பிர​மாணம் செய்து வைத்​தார். சென்னை உயர் நீதி​மன்​றத் தலைமை நீதிபதியாக இருந்த எம்​.எம்​.வஸ்​தவா நேற்று முன்தினம் ஓய்வு பெற்​றார்.

இதையடுத்​து, 55-வது தலைமை நீதிபதியாக, சுஷ்ருத் அர்​விந்த் தர்​மா​தி​காரியை நியமித்து குடியரசுத் தலை​வர் உத்​தர​விட்​டார். கேரள உயர் நீதி​மன்​றத்​தில் நீதிபதியாக பதவி வகித்து வந்த இவர் சட்​டீஸ்​கர் மாநிலத்​தைச் சேர்ந்​தவர்.

          

இந்​நிலை​யில், ஆளுநர் மாளிகை​யில் தர்​மா​தி​காரி பதவியேற்பு நிகழ்வு நேற்று நடை​பெற்​றது. புதிய தலைமை நீதிபதியாக தர்​மா​தி​காரியை நியமித்து குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு பிறப்​பித்த உத்​தரவை தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம் வாசித்​தார்.

இதைத் தொடர்ந்​து, ஆளுநர் ஆர்​.என்​.ரவி பதவிப் பிர​மாணம் செய்து வைக்க, சுஷ்ருத் அர்​விந்த் தர்​மா​தி​காரி உறு​தி​மொழி ஏற்​றுக்​கொண்​டு, தலைமை நீதிபதியாக பதவி​யேற்​றுக் கொண்​டார்.

இந்த நிகழ்​வில் சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதிகள், தலை​மைப் பதி​வாளர் எஸ்​.அல்​லி, அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்​.ராமன், கூடு​தல் தலைமை வழக்​கறிஞர்​கள், மத்​திய அரசின் கூடு​தல் சொலிசிட்​டர் ஜெனரல் ஏஆர்​எல்.

சுந்​தரேசன், பார் கவுன்​சில் துணைத் தலை​வர் எஸ்.பிர​பாகரன், தமிழ்​நாடு, புதுச்​சேரி பார் கவுன்​சில் தலை​வர் பி.எஸ்​.அமல்​ராஜ், துணைத் தலைவர் வி.​கார்த்​தி​கேயன், வழக்​கறிஞர்​கள் சங்​கத் தலை​வர் ஜி.மோக​ன கிருஷ்ணன், மெட்​ராஸ் பார் அசோசி​யேஷன் தலை​வர் வி.ஆர்​.கமல​நாதன், உயர் நீதி​மன்ற பெண் வழக்​கறிஞர்​கள் சங்​கத் தலை​வர் என்​.ரேவ​தி, லா அசோசி​யேஷன் தலைவர் செல்​வ​ராஜ் உள்​ளிட்ட நிர்​வாகி​கள், சிறப்பு வழக்கறிஞர் மூ.பழனிமுத்​து, சட்​டப்​பேரவை துணைத் தலை​வர் பிச்​சாண்​டி, அமைச்சர் ரகுப​தி, அதிமுக சார்​பில் முன்​னாள் அமைச்சர் ஜெயக்கு​மார், சி.​வி. சண்​முகம் எம்​.பி., டிஜிபி வெங்​கட​ராமன், சென்னை மாநகர காவல் ஆணை​யர் அருண் மற்​றும் தலைமை நீதிபதி தர்​மா​தி​காரி​யின் குடும்​பத்​தினர் பங்​கேற்​றனர்.

மாலை​யில் பொறுப்​பேற்பு

பின்​னர், உயர் நீதி​மன்ற கலை​யரங்​கில் மாலை​யில் நடந்த நிகழ்வில் அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன் வரவேற்​புரை நிகழ்த்த, புதிய தலைமை நீதிபதி​யாக தர்​மா​தி​காரி முறைப்​படி பொறுப்​பேற்​றுக் கொண்​டார். இந்த நிகழ்​விலும் உயர் நீதி​மன்ற நீதிபதிகள், வழக்​கறிஞர்​கள் சங்க நிர்​வாகி​கள், நீதித்​துறை அதி​காரி​கள் உள்பட திரளானோர் பங்​கேற்​றனர்.

விருப்பு, வெறுப்பின்றி கடமையாற்றுவேன் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி உறுதி

சென்னை உயர் நீதி​மன்​ற தலைமை நீதிபதியாக பதவி​யேற்​ற சுஷ்ருத் அர்​விந்த் தர்​மா​தி​காரிக்கு பாரம்​பரிய வழக்​கப்படி வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. நீதிமன்ற கலை​யரங்​கில் நடை​பெற்ற விழா​வில் அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன் உள்​ளிட்​டோர் வரவேற்​றனர்.

தொடர்ந்து ஏற்​புரை​யாற்​றிய நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி, “நாட்​டிலேயே பழமை​யான, பாரம்​பரியமிக்க சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தலைமை நீதிபதியாகப் பதவி​யேற்று இருப்​பதை பெரு​மை​யாகக் கருதுகிறேன்.

உயர் நீதி​மன்​றத்​தின் உயர்ந்த மரபு​களை பாது​காத்து வலுப்​படுத்த விருப்​பு, வெறுப்​பில்​லாமல் எனது கடமையை ஆற்​று​வேன். வழக்​கறிஞர்​களும், நீதிபதிகளும் ஒரு வண்​டி​யின் இரு சக்​கரங்​கள் என்​றாலும், வழக்​கறிஞர்​களை நான் பங்​கு​தா​ரர்​களாகவே காண்​கிறேன்.

வழக்கு விசா​ரணையை தேவை​யில்​லாமல் தள்​ளிவைக்​கும்​படி கோரக்​ கூ​டாது. நிலுவை வழக்​கு​களின் எண்​ணிக்​கையை குறைக்க போதிய ஒத்​துழைப்பு அளிக்க வேண்​டும். நீதிபரி​பாலனம் சிறக்க தொழில்​நுட்ப வசதி​களை பயன்​படுத்தி நீதித்​துறையை நவீனப்​படுத்த வேண்​டும். இளம் வழக்​கறிஞர்​களுக்​கும் அதி​காரம் வழங்​கப்பட வேண்​டும்” என்​றார்.

SCROLL FOR NEXT