தமிழகம்

தண்டையார்பேட்டையில் ரூ.2.50 கோடியில் புதிய பேருந்து நிலையம்: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

செய்திப்பிரிவு

சென்னை: தண்டையார்பேட்டையில் ரூ.2.50 கோடி​யில் புதி​தாக கட்​டப்​பட்ட பேருந்து நிலை​யத்தை அமைச்​சர்​கள் விஜய் தமிழன் பார்த்​திபன், மரிய​வில்​சன் ஆகியோர் நேற்று திறந்து வைத்​தனர்.

சென்னை மாநக​ராட்​சி, தண்​டை​யார்​பேட்டை மண்​டலம், 38-வது வார்​டு, தண்​டை​யார்​பேட்டை ஐஓசி-எண்​ணூர் நெடுஞ்​சாலை​யில் ராதா

கிருஷ்ணன் நகர் எம்​எல்ஏ தொகுதி மேம்​பாட்டு நிதி மற்​றும் மூலதன நிதி​யின் கீழ் ரூ.2.50 கோடி​யில் 16 ஆயிரம் சதுர அடி பரப்​பள​வில் கட்​டப்​பட்ட புதிய பேருந்து நிலை​யம் திறப்பு விழா நேற்று நடை​பெற்றது.

போக்​கு​வரத்து துறை அமைச்​சர் விஜய் தமிழன் பார்த்​திபன், நிதி​யமைச்​சர் மரிய​வில்​சன் ஆகியோர் பேருந்து நிலை​யத்தை திறந்து வைத்​து, பேருந்​துகள் இயக்​கத்தை தொடங்கி வைத்​தனர்.

இப்​பேருந்து நிலை​யத்​தில், குழந்​தைகளுக்கு தாய்​மார்​கள் பாலூட்​டும் அறை, காத்​திருப்​போர் அறை, பேருந்து நேரக்​காப்​பாளர் அறை, ஆண்​கள், பெண்​கள் மற்​றும் மாற்​றுத்​திற​னாளி​கள் கழி​வறை உள்​ளிட்ட கட்​டமைப்பு வசதி​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

மேலும், இப்​பேருந்து நிலை​யத்​திலிருந்து 12 பேருந்​துகள் மூலம் 122 புறப்​பாடு​கள் இயக்​கப்​படு​கின்​றன. இதன்​மூலம் இப்​பகு​தி​யில் வசிக்​கும் 18 ஆயிரத்​துக்​கும் மேற்பட்டோர் பயன்​பெறு​வர்.

இந்​நிகழ்​வில், மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன், மாநகர் போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் வீ.ப.ஜெயசீலன், வடக்கு வட்​டார துணை ஆணை​யர் ஸ்வேதா சுமன், தண்​டை​யார்​பேட்டை மண்டல அலு​வலர் ஏ.ராஜ்கு​மார்​ உள்​ளிட்​டோர்​ பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT