தமிழகம்

டாஸ்மாக் ஊழியர்களுக்குப் புதிய சீருடை; பண்டிகைக்கு ரூ.20,000 முன்பணம்: தமிழக அரசு அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: பண்​டிகை கால செல​வு​களுக்​காக டாஸ்​மாக் ஊழியர்​களுக்கு ரூ.20 ஆயிரம் முன்​பணம் வழங்​கப்​படும். மேற்​பார்​வை​யாளர்​கள், விற்​பனை​யாளர்​களுக்​குப் புதிய சீருடை அறி​முகப்​படுத்​தப்​படும் என்று தமிழக அரசு அறி​வித்​துள்​ளது.

அண்​மை​யில் நடந்த சட்​டப்​பேர​வைக் கூட்​டத்​தொடரில், டாஸ்​மாக் ஊழியர்​களுக்​கான பல்​வேறு அறி​விப்​பு​கள் வெளி​யிடப்​பட்​டன. குறிப்​பாக, ஊழியர்​களுக்​கான சம்பள உயர்​வை அமைச்​சர் விக்​னேஷ் பேர​வை​யிலேயே அறி​வித்​தார். அதன்​படி, பண்​டிகை கால செல​வீன​மாக அனை​வருக்​கும் அரசு சார்​பில் ரூ.20 ஆயிரம் முன்​பணம் வழங்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டது.

இதுதொடர்​பாக டாஸ்​மாக் நிர்​வாகம் நேற்று அதி​காரப்​பூர்வ சுற்​றறிக்கை வெளி​யிட்​டது. அதில் கூறி​யிருப்​ப​தாவது: டாஸ்​மாக் சில்​லறை விற்​பனைக் கடைகளில் பணி​யாற்​றும் தகு​தி​யுடைய அனைத்து ஊழியர்​களுக்​கும் ஆண்​டுக்கு ஒரு முறை ரூ.20 ஆயிரம் பண்​டிகை கால முன்​பணம் வழங்​கப்​படும். இந்​தத் தொகை எந்​த​ வித வட்டியும் இல்​லாமல் 10 மாதங்​களுக்​குத் தவணை முறை​யில் சம்​பளத்​தில் பிடித்​தம் செய்​யப்​படும்.

இதனை ஊழியர்​கள் தங்​களுக்கு விருப்​ப​மான பொங்​கல், தீபாவளி, கிறிஸ்​து​மஸ், ரம்ஜான், பக்​ரீத் உள்​ளிட்ட பண்​டிகை​களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து பெற்று கொள்​ளலாம். முன்​பணம் வாங்​கும் ஊழியரின் சம்​பளத்​தில் மாதந்​தோறும் ரூ.2 ஆயிரம் பிடித்​தம் செய்​யப்​படும்.

அது முடிந்த பிறகு அடுத்து முன்​பணம் வழங்​கும் நடை​முறை தொடரும். ஊழியர்​கள் அந்​தந்த மாவட்ட மேலா​ளரிடம் பண்​டிகை குறித்​தான விளக்​கங்​களை எழுத்​துப்​பூர்​வ​மாகக் கொடுக்​கும்​பட்​சத்​தில் அவர்​களு​டைய சம்​பளம் வரவு வைக்​கப்​படும் வங்​கிக் கணக்​கில் முன்​பணத்தை பெற்​றுக் கொள்ள வழி​வகை செய்​யப்​படும்.

ஒரு​வேளை ஊழியர் முழு தொகை​யை​யும் செலுத்​து​வதற்கு முன்​பாக பணி​யில் இருந்து வில​கி​னாலோ அல்​லது ஓய்வு பெற்​றாலோ அவருக்கு வழங்க வேண்​டிய நிலு​வைத் தொகை​யில் இருந்து மீத​முள்ள முழு தொகை​யும் ஒரே தவணை​யாகப் பிடித்​தம் செய்​யப்​படும். இவ்​வாறு டாஸ்​மாக் நிர்​வாக அறிக்​கையில் கூறப்​பட்​டுள்​ளது.

இதே​போல், டாஸ்​மாக் மேற்​பார்​வை​யாளர்​கள், விற்​பனை​யாளர்​கள், உதவி​யாளர்​களுக்கு ஆண்​டுக்கு 3 சீருடைகள் மற்​றும் தையல் செல​வு​களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்​கப்​படும் என்று சட்​டப்​பேர​வை​யில் அறிவிக்​கப்​பட்​டது. அதன்​படி, டாஸ்​மாக் நிறு​வனத்​தின் அதி​காரப்​பூர்வ இலச்​சினை​யுடன் சீருடைக்​கான வடிவ​மைப்பை டாஸ்​மாக் நிர்​வாகம் வெளி​யிட்​டுள்​ளது.

விற்​பனை மற்​றும் உதவி விற்​பனை​யாளர்​களுக்கு வெளிர் பழுப்பு நிற சட்​டை, அடர் சாம்​பல் நிற பேன்ட், மேற்​பார்​வை​யாளர்​களுக்கு நீல நிற சட்​டை, அடர் நீல நிற பேன்ட் கொடுக்​கப்​படும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​தப் புதிய சீருடை நடை​முறையை நவ.15-ம் தேதிக்​குள் அனைத்து டாஸ்​மாக் கடை ஊழியர்​களும்​ பின்​பற்​ற வேண்​டும்​ என்​று உத்​தரவிடப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT