தேசிய எஸ்சி ஆணைய இயக்குநர் எஸ்.ரவிவர்மன்
செங்கல்பட்டு: ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கான பராமரிப்பு நிதி, உணவு, பிற செலவினங்களுக்கான உதவித் தொகையை உயர்த்த வேண்டும் என்று நீலம் பண்பாட்டு மையத்தின் தலைமை ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் சி.வெங்கடேசன் அளித்த புகாரின் அடிப்படையில், தேசிய எஸ்சி ஆணையம் 17.09.2025 அன்று ஆதிதிராவிடர, பழங்குடியினர் நலத்துறை செயலாளருக்கு முதல் கடிதம் அனுப்பியது.
பின்னர் 29.04.2026 அன்று நினைவூட்டல் கடிதமும் அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை தமிழக அரசிடம் இருந்து உரிய அறிக்கை கிடைக்கவில்லை என ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, 02.07.2026 தேதியிட்ட 2-வது நினைவூட்டல் கடிதத்தில், தேசிய எஸ்சி ஆணைய இயக்குநர் எஸ்.ரவிவர்மன், இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கடிதம் கிடைத்த நாளில் இருந்து 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.