

சென்னை: திருப்பதி - புதுச்சேரி ஜூலை 12, 13, 14, 15, 17, 18, 25, 29 தேதிகளில் காலை 4.10 மணிக்கு புறப்படும் மெமு ரயில் (16111), முண்டியம்பாக்கம் - புதுச்சேரி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
புதுச்சேரி - சென்னை எழும்பூருக்கு மேற்படி தேதிகளில் பிற்பகல் 3.35 மணிக்கு புறப்பட வேண்டிய மெமு ரயில் (66052), புதுச்சேரி - முண்டியம்பாக்கம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
விழுப்புரம் - சென்னை கடற்கரை ஜூலை 12, 13, 14, 15, 17, 18 தேதிகளில் மதியம் 1.30 மணிக்கு புறப்பட வேண்டிய மெமு ரயில் (66046), விழுப்புரம் - முண்டியம்பாக்கம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.
தாம்பரம் - விழுப்புரத்துக்கு மேற்படி நேதிகளில் காலை 9.45 மணிக்கு புறப்படும் மெமு ரயில் (66045), முண்டியம்பாக்கம் - விழுப்புரம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. புதுச்சேரி - திருப்பதிக்கு ஜூலை 12, 13, 14, 15 தேதிகளில் பிற்பகல் 2.40 மணிக்கு புறப்பட வேண்டிய மெமு ரயில் (16112) 1 மணி நேரம் தாமதமாக பிற்பகல் 3.40 மணிக்கு புறப்படும்.