தமிழகம்

“என்னுடைய பதிவு ஆதங்கத்தின் வெளிப்பாடு; தவெகவில் இருந்து விலகவில்லை” - நாஞ்சில் சம்பத் விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: ‘எனது ஆதங்​கத்​தின் வெளிப்​பாட்​டை​தான் எக்​ஸ்​தளத்​தில் பதிவு செய்​தேன். தவெக​வில் இருந்து நான் வில​க​வில்​லை’ என தவெக பரப்​புரை செய​லா​ளர் நாஞ்​சில் சம்​பத் தெரி​வித்​துள்ளார்.

தமிழக வெற்​றிக் கழகத்​தில் கடந்த டிசம்​பரில் இணைந்த நாஞ்​சில் சம்​பத்​துக்​கு, கட்​சி​யின்பரப்​புரைச் செய​லா​ளர் பொறுப்பு வழங்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் நேற்று முன்​தினம், ‘போ​னால் போகட்​டும் போடா இந்த பூமி​யில் நிலை​யாய் வாழ்ந்​தவர் யார​டா. என்​னுடைய பகலை யாரும் இருட்​டாக்க முடி​யாது.

என்​னுடைய வெளிச்​சத்தை யாரும் அணைக்கமுடி​யாது. என்​னுடைய காற்றை யாரும் வழிமறிக்க முடி​யாது’ என எக்​ஸ்​தளப் பக்​கத்​தில் அவர் பதி​விட்​டது பரபரப்பை ஏற்​படுத்​தி​யது. அதைத் தொடர்ந்​து, தவெக மீது நாஞ்​சில் சம்​பத் அதிருப்​தி​யில் இருப்​ப​தாக​வும், அவர் நடிகர் தனுஷுடன் இணைய உள்​ள​தாக​வும் தகவல்​கள் பரவின.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ செய்​தி​யாளரிடம் நாஞ்​சில் சம்​பத் கூறிய​தாவது: தவெக நட்​சத்​திர பட்​டியலில் எனது பெயர் இடம்​பெற​வில்​லை. தவெக​வின் பரப்​புரை செய​லா​ள​ரான எனக்கு வாய்ப்பு தரப்​பட​வில்​லை. அந்​தக் கவலை, ஆற்​றாமை, ஆதங்​கத்தை எனது பதி​வின் மூலம் வெளிப்​படுத்​தினேன்.

எனது பதிவு தலை​மைக்கு சொன்​னது​தான். நடிகர் தனுஷுடன் இணைய இருப்​ப​தாக வலை​தளங்​களில் செய்தி வரு​கிறது. அது​போன்ற முட்​டாள்​தன​மான முடிவை எடுக்​க​மாட்​டேன்​. தவெக​வில்​​தான்​ இருக்​கிறேன். அங்​கிருந்​து வில​க​வில்​லை என்றார்.

SCROLL FOR NEXT