தமிழகம்

இந்துக்களின் மத அடையாளங்கள் பாதுகாக்கப்படுவது அவசியம்: நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சென்னை: மதச்​சார்​பின்மை என்ற போர்​வை​யில், முழுக்க முழுக்க சிறு​பான்​மை​யின மக்​களுக்​காக மட்​டுமே செயல்​ப​டா​மல், இந்​துக்​களின் மத அடை​யாளங்​கள் பாது​காக்​கப்​படு​வதை​யும் முதல்​வர் விஜய் உறுதி செய்ய வேண்​டும் என்று தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் வலி​யுறுத்தி உள்​ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் வலை​தளப் பதி​வில் அவர் கூறி​யுள்​ள​தாவது: செங்​கல்​பட்டு மாவட்​டம் மது​ராந்​தகம் அருகே விலை மதிப்​பற்ற 2.5 அடி உயர மரகத முரு​கர் சிலை காணா​மல்​போன பதற்​றம் தணிவதற்கு முன்​பாகவே, ஆன்​மிக அரசி​யல் கட்​சி​யின் சார்​பாக, சிறு​வாபுரி​யில் இருந்து எம்​பெரு​மான் முரு​க​னின் அறு​படை வீடு​களுக்​கும் யாத்​திரை​யாக கொண்டு செல்​லப்பட இருந்த 108 வெற்​றி வேல்​கள் அடங்​கிய வாக​னத்​தை, மீஞ்​சூர் நெய்​த​வாயல் அருகே சமூக விரோ​தி​கள் சிலர் தீயிட்டு கொளுத்​தி​யுள்ள சம்​பவம் அதிர்ச்​சி​யளிக்​கிறது.

108 கிராமங்​களின் வழி​பாட்​டுக்​காக வழங்​கப்பட இருந்த வெற்​றி வேல்​கள் தீயில் எரிந்து கரு​கு​வதைப் பார்க்​கும்​போது நெஞ்​சம் கனத்​துப் போகிறது.

சட்​டப்​பேர​வையை ‘சர்ச்’ ஆக மாற்​றிய விஜய் அரசு, திருப்​பரங்​குன்​றத்​தில் தீபம் ஏற்​று​வதற்கு மட்​டும் வலு​வாக தடை போட்​டால் சமூகத்​தில் மத நல்​லிணக்​கம் எப்​படி மலரும்? இந்​துக்​களின் நம்​பிக்​கைகளை​யும் மதிக்க வேண்​டும் என்ற சமத்​துவ உணர்வு ஆளும் அரசுக்கே இல்​லாத​போது, சமூக விரோ​தி​களுக்கு எப்​படி பயம் இருக்​கும். அதனால்​தான் இது​போன்ற கொடுஞ்​செயல்​கள் அச்​சமின்றி அரங்​கேறுகின்​றன.

இந்​துக்​கள் மீது இத்​தகைய அடக்​கு​முறை​கள், வன்​முறை​கள் தொடரு​வது ஆபத்​தானது. எனவே, இச்​சம்​பவத்​தில் தொடர்பு உடைய​வர்​களைக் கண்​டறிந்து அவர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

மதச்​சார்​பின்மை என்ற போர்​வை​யில், முழுக்க முழுக்க சிறு​பான்​மை​யின மக்​களுக்​காக மட்​டுமே செயல்​ப​டா​மல், இந்​துக்​களின் மத அடை​யாளங்​கள் பாது​காக்​கப்​படு​வதை​யும் உறுதி செய்ய வேண்​டும் என முதல்​வர் விஜய்யை வலி​யுறுத்​துகிறேன்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT