தமிழகம்

மாணவி கொலையில் யாரும் கைதாகவில்லை; காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதா? - நயினார் நாகேந்திரன் கேள்வி

செய்திப்பிரிவு

கோவில்பட்டி: வேடநத்​தம் மாணவி படு​கொலை சம்​பவம் நடந்து 9 நாட்​களாகி​யும் இது​வரை குற்​ற​வாளி​கள் கைது செய்​யப்​பட​வில்​லை. அப்​படி​யென்​றால் காவல்​துறைக்கு திறமை இல்​லை​யா, காவல்​துறை​யின் கைகள் கட்​டப்​பட்​டுள்​ள​தா என்​று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கேள்வி எழுப்​பி​னார்.

தூத்​துக்​குடி மாவட்​டம் குளத்​தூர் அருகே வேடநத்​தம் கிராமத்​தில் கொலை செய்​யப்​பட்ட மாண​வி​யின் குடும்​பத்​தினரை, பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் நேற்று சந்​தித்து ஆறு​தல் கூறி​னார். அப்​போது, அவர்​களது குடும்​பத்​துக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்​கி​னார்.

          

மேலும், மாண​வி​யின் மூத்த சகோ​தரி​யின் படிப்​புச் செலவை ஏற்​ப​தாக​வும், அவருக்கு வேலை​வாய்ப்பு பெற்​றுத் தர நடவடிக்கை எடுப்​ப​தாக​வும் அப்போது அவர் உறுதி தெரி​வித்​தார்.

பின்​னர், அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: மாணவி காணா​மல் போனவுடன் அவரது தந்தை குளத்​தூர் காவல் நிலை​யத்​தில் புகாரளிக்கச் சென்​ற​போது, அங்​கிருந்த காவல் அதி​காரி செல்​வ​ராஜ், மாணவி குறித்து அவதூறாகப் பேசி​யுள்​ளார். மாண​வி​யின் உடலில் 22 காயங்​கள் இருந்​துள்​ளன.

அதில், 18 காயங்​கள்​தான் உடலின் வெளியே இருந்​துள்​ளன. இது​மா​திரி ஒரு மோச​மான சம்​பவம் சிவகங்​கை​யிலும் நடந்​துள்​ளது. தமிழ்​நாட்​டில் காவல்​துறை இருக்​கிறதா இல்​லை​யா என்ற கேள்வி எழுகிறது.

கீழ்​மட்​டத்​தில் உள்ள அதி​காரி​கள் கட்​டுப்​பாடு இல்​லாமல் நடக்​கின்​றனர். சம்​பவம் நடந்து 9 நாட்​களாகி​யும் இது​வரை குற்​ற​வாளி​கள் கைது செய்​யப்​பட​வில்​லை.

அப்​படி​யென்​றால் காவல்​துறைக்கு திறமை இல்​லை​யா, காவல்​துறை​யின் கைகள் கட்​டப்​பட்​டுள்​ள​தா, வீட்​டில் உள்ள பெண் பிள்​ளை​கள் எப்​படி இனி வெளியே நடமாட முடி​யும், பெண் குழந்​தைகளை வைத்​துள்ள பெற்​றோருக்கு அவர்​கள் வெளியே சென்று விட்டு பத்​திர​மாக வீடு திரும்​பு​வார்​களா என்ற சந்​தேகம் இந்த ஆட்​சி​யில் ஏற்பட்​டுள்​ளது.

கஞ்சா உள்​ளிட்ட‌ அனைத்து போதைப் பொருட்களும் தமிழகத்​தில் நடமாடு​கின்றன. சட்​டப்​பேரவைத் தேர்​தல் வரவுள்​ளது, ஆட்சி மாற்​றம் வர வேண்​டும். தமிழகத்​தில் இது​வரை 8,900 கொலைகள் நடந்​துள்​ளன.

இதில் 1,977 கொலைகள் பெண்​களுக்கு எதி​ரானது. அதி​லும் 389 கொலைகள் குழந்​தைகளுக்கு எதி​ரான குற்​றங்​கள். இவை அனைத்தையும் முதல்​வர் மறுக்​கிறார்.

அவரது கண்​காணிப்​பில் காவல்​துறை இல்​லை. டிஜிபியை கூட நியமிக்க முடிய​வில்​லை. ஆட்சி மாற்​றம்​தான் இதற்கு முடி​வாக இருக்​கும். இவர் அவர் கூறி​னார். அப்போது பாஜக மாவட்ட தலை​வர்​கள் சரவண கிருஷ்ணன், சித்​ராங்​கதன் ஆகியோர் உடனிருந்​தனர்​.

மாணவியின் தந்தை உறுதி

இதனிடையே கொலை செய்​யப்​பட்ட மாண​வி​யின் தந்தை சுப்​பு​ராஜ் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: எனது மகள் இறந்​ததற்கு காரண​மான குற்​ற​வாளி கைது செய்​யப்​பட்​டால், மகளின் உடலை வாங்க தயா​ராக உள்​ளேன். கொலை செய்​யப்​பட்டு இன்​றுடன் 9 நாட்​களாகிறது.

குற்​ற​வாளி​கள் கைது செய்​யப்​பட்​டால் தான் உடலை வாங்க வேண்​டும் என்ற முடி​வில் தான் இருக்​கிறேன். பிரேத பரிசோதனை அறிக்கை காவல் நிலையம் வந்துள்ளது. அதனை இனிமேல்தான் வாங்க வேண்​டும்.

காவல் துறைக்கு முழு ஒத்​துழைப்பு கொடுத்​துள்​ளோம். எனக்கு யார் மீதும் சந்​தேகம் கிடை​யாது. இந்த ஊரில் அனை​வரும் ஒற்​றுமை​யாக இருப்​ப​தால் யார் மீதும் சந்​தேகப்பட முடி​யாது. ஆனால் அரசுத் தரப்பில் நான் எதிர்​பார்த்த நடவடிக்கை இல்​லை. ஆனால், எனக்கு நிச்சயம் நல்ல தீர்ப்பு கிடைக்​கும் என நம்​பு​கிறேன். இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT