மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 19 மார்ச் 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 19 மார்ச் 2026
Updated on
2 min read

மேஷம்: பணப் பற்றாக்குறை விலகும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். தாயாரின் உடல்நலம் சீராகும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர்.

ரிஷபம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டு கிட்டும். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உறவினர் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர். பங்குதாரர் ஆதரவு தருவார்.

மிதுனம்: குடும்பத்தினருடன் சென்று குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். வீட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு பெருகும். பழைய பொருட்களை மாற்றுவீர். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். பணவரவால் சேமிப்பு கூடும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருவீர். பழைய சிக்கல்கள் விலகும். அலுவலகத்தில் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனையை ஏற்கவும்.

சிம்மம்: சில காரியங்களை போராடி முடிப்பீர். வாகனம் செலவு வைக்கும். பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசவும். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

கன்னி: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில பணிகளை செய்து முடிப்பீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

துலாம்: தாய்வழி உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். சுப நிகழ்ச்சிகள், விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர்.

விருச்சிகம்: புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர்கள். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். குடும்பத்தினரால் மனநிம்மதி கிட்டும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும்.

தனுசு: குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் மனநிம்மதி பிறக்கும். நீண்ட நாளாக சந்திக்காமல் இருந்த உறவினர் தேடி வருவார். வயிற்றுவலி, கழுத்துவலி விலகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

மகரம்: முன்கோபத்தை கைவிட்டு அறிவுப்பூர்வமாக செயல்படுவீர். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். தாயார், மனைவியின் உடல்நலம் சீராகும். தந்தைவழியில் அனுகூலம் உண்டு. வியாபார ரீதியாக வெளியூர் செல்வீர். உத்தியோகம் சிறக்கும்.

கும்பம்: மனக் குழப்பம் விலகும். வெளியூரிலிருந்து உறவினர், நண்பர்கள் வருகையுண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்க்கலாம். பங்குதாரரின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்தாதீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

மீனம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். பணப் பற்றாக்குறையை எளிதாக சமாளிப்பீர். மூத்த சகோதரர்களின் ஆதரவுகிட்டும். பூர்வீக சொத்து தொடர்பான வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் நிதானம் தேவை. உத்தியோகம் சிறக்கும்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 19 மார்ச் 2026
ஜோதிட நாள்காட்டி 19.03.2026 | பங்குனி 05 - வியாழக்கிழமை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in