தாராபுரம் தொகுதி மூலனூரில் அதிமுக வேட்பாளர் பானுமதிக்கு ஆதரவாக நேற்று பிரச்சாரம் செய்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.

 
தமிழகம்

‘இடைத்தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ - நயினார் நாகேந்திரன் கருத்து

செய்திப்பிரிவு

தாராபுரம்: தமிழகத்​தில் வெறும் ரீல்ஸ் ஆட்​சி​தான் நடக்​கிறது. இடைத்​தேர்​தலுக்கு பின்​னர் ஆட்சி மாற்​றம் ஏற்​படும் என்று தாராபுரம் பிரச்​சா​ரத்​தில் தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​தார்.

தாராபுரம் தொகுதி அதி​முக வேட்​பாளர் பானு​ம​திக்கு ஆதர​வாக மூலனூரில் நயி​னார் நாகேந்​திரன் நேற்று இரவு பிரச்​சா​ரம் செய்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: தாராபுரம் தொகு​தி​யில் கிராமங்​கள் அதி​க​மாக இருந்​தா​லும் இங்​குள்ள மக்​கள் அரசி​யல் விழிப்​புணர்வு உள்​ளவர்​கள். தவெக வேட்​பாளர் சத்​ய​பாமா மேடை​யில் அழுகிறார். அவரை விஜய் தேற்​றுகிறார். அவர் அழ வேண்​டிய அவசி​யம் என்ன? மக்​களின் கட்​சி​யான அதி​முக​வுக்கு தாராபுரம் தொகு​தி​யில் வெற்​றியை தேடித்தர வேண்​டும்.

தமிழகத்​தில் தற்​போது வெறும் ரீல்ஸ் ஆட்​சி​தான் நடை​பெறுகிறது. கடந்த தேர்​தலில் 5, 6 இடத்​தில் மட்​டுமே பேசிய விஜய், நாளைக்கு 39 இடத்​தில் பேசவுள்​ளார் என்​றால் ஆட்சி மாற்​றத்​துக்​கான அறிகுறி​தான் தாராபுரம் இடைத்​தேர்​தல். இதற்கு சத்​ய​பா​மாவுக்​குத்​தான் நன்றி சொல்ல வேண்​டும்.

முதல்​வர் வீட்​டில் இருந்து வெறும் 7 கி.மீ. தொலை​வில் உள்ள நிறு​வனத்​துக்​காக விஜய் லண்​ட​னுக்கு சென்று தொழில் முதலீட்டை ஈர்க்​கிறார் என்று சொன்​னால் மக்​களை அவர் எவ்​வளவு முட்​டாள்​களாக நினைக்​கிறார்.

தமிழகத்​தில் ஊழல் அதி​க​மாக உள்​ளது என்று அவர்​களுக்கு ஆதரவு கொடுத்த மார்க்​சிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் சண்​முகமே சொல்​லி​யுள்​ளார். ஆகவே, இடைத்​தேர்​தலுக்கு பின்​னர் ஆட்சி மாற்​றம் ஏற்​படும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

SCROLL FOR NEXT