தமிழகம்

என்டிஏ ஆட்சியில் உறுதிமொழிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்: நயினார் நாகேந்திரன் உறுதி

செய்திப்பிரிவு

திருச்சி: தமிழகத்​தில் தேசிய ஜனநாயகக் கூட்​டணி ஆட்சி அமைந்​தவுடன், அனைத்து உறு​தி​மொழிகளும் நிச்​ச​யம் நிறைவேற்​றப்​படும் என்று பாஜக மாநிலத் தலை​வர் நயினார் நாகேந்​திரன் கூறி​னார்.

திருச்சி விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: தமிழகத்​தில் கஞ்சா உள்​ளிட்ட போதைப் பொருட்​கள் விற்​பனை, சட்​டம்​-ஒழுங்கு சீர்​குலை​வு, பெண்​களுக்கு பாது​காப்பு இல்​லாத நிலை உள்​ளிட்​ட​வற்றை மறைக்​கவே ரூ.5 ஆயிரம் வழங்​கு​கிறார்​கள்.

          

ஆனால், இதைப் பார்த்து ஏமாற மக்​கள் தயா​ராக இல்​லை. வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக​வுக்கு ஒட்​டுமொத்​த​மாக தமிழக மக்​கள் விடு​முறை கொடுப்​பார்​கள்.

மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்ஷா தமிழகத்​துக்கு வந்​தால் மாற்​றம் ஏற்​படும். தேசிய ஜனநாயகக் கூட்​டணி ஆட்​சிக்கு வந்​தால், நாங்​கள் கொடுக்​கும் உறு​தி​மொழிகளை நிச்​சய​மாக நிறைவேற்​று​வோம்.

முன்​னாள் அமைச்​சரும், தவெக நிர்​வாகி​யு​மான செங்​கோட்​டையன், கட்​சித் தலை​வர் விஜய்யை தேடிக் கொண்​டிருக்​கிறார். கட்​சி​யின் மூத்த தலை​வ​ரால்​கூட சந்​திக்க முடி​யாத நபரை, சாதாரண மக்​கள் எப்​படி சந்​திக்க முடி​யும்? இவ்​வாறு அவர் கூறி​னார்​.

SCROLL FOR NEXT