தமிழகம்

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடியாது என்றால் மாற்று இடத்தை தேர்வு செய்யாதது ஏன்? - நயினார் நாகேந்திரன் கேள்வி

செய்திப்பிரிவு

சென்னை: ‘பரந்​தூரில் விமான நிலை​யம் அமைக்க முடி​யாது என்று கூறும் தவெக அரசு, மாற்று இடத்தை தேர்வு செய்​யாதது ஏன்?’ என பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கேள்வி எழுப்பி உள்​ளார்.

இதுகுறித்து தனது எக்​ஸ்​தளப் பதி​வில் அவர் கூறி​யிருப்​ப​தாவது:சமீபத்​தில் வெளி​யான நிதி ஆயோக் திட்​டக்​குழு அறிக்​கை​யில், தமிழகத்​தின் விமான நிலை​யங்​கள், கழி​வுநீர் மேலாண்மை உள்​ளிட்ட உள்​கட்​டமைப்​பு​களில் மாநில அரசு அதிக கவனம் செலுத்த வேண்​டும் என குறிப்​பிடப்​பட்​டுள்​ளதை விஜய் தலை​மையி​லான அரசு, கவனத்​தில் கொள்ள வேண்​டும்.

தமிழகத்​தில் புதி​தாக ஓர் விமான நிலை​யம் அமைவதற்கு முட்​டுக்​கட்டை போடும் வகை​யில், ‘வி​மான ஓடு​தளம் அமைக்க பரந்​தூர் ஏற்ற இடம் இல்​லை’ என தவெக​வின் சட்​டத்​துறை அமைச்​சர் நிர்​மல் குமார், கடந்த சில வாரங்​களுக்கு முன்பு கூறி​யிருந்​தார்.

அதே​நேரம், பரந்​தூர் விமான நிலை​யத்​துக்கு மாற்று இடம் வேண்டி தமிழக அரசு இது​வரை எந்த கோரிக்​கை​யும் மத்​திய அரசிடம் வைக்​க​வில்லை என மத்​திய விமானப் போக்​கு​வரத்து துறை இணை அமைச்​சர் நாடாளு​மன்​றத்​திலேயே தெளிவுபடுத்​தி​விட்​டார்.

அப்​படி​யா​னால், அமைச்​சர் நிர்​மல்​கு​மார் எந்த ஆதா​ரத்​தின் அடிப்​படை​யில் பரந்​தூரில் விமான நிலை​யம் அமைக்​கக்கூடாது என்று கூறி​னார்? பரந்தூரில் விமான நிலை​யம் அமைக்க முடி​யாது என்று கூறும் தவெக அரசு, இது​வரை மாற்று இடத்தை தேர்வு செய்​யாதது ஏன்?

எனவே, நிதி ஆயோக் அறிக்​கை​யின்​படி, தமிழகத்​தின் விமானப் போக்​கு​வரத்து துறையை மேம்​படுத்​தும் வகை​யில், தமிழகத்​தில் மேலும் ஓர் புதிய விமான நிலை​யம் அமைக்க தவெக அரசு முழு ஒத்​துழைப்பு கொடுக்க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ கூறி​யுள்​ளார்​.

SCROLL FOR NEXT