சென்னை: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னை அமைந்தகரையில் நேற்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:அண்ணன் செங்கோட்டையன் எனக்கு மிகவும் வேண்டப்பட்டவர்.
1996 முதல் 2001 காலக்கட்டங்களில், ஜெயலலிதாவின் பயணத்திட்டங்களை நானும், அவரும் தான் வகுத்து கொடுத்து ஒன்றாக பயணிப்போம். என்னை பற்றி அவருக்கு நன்றாக தெரியும்.
அதேபோல், அவரை பற்றி எனக்கு ரொம்ப நன்றாகவே தெரியும். எனவே, அண்ணன் செங்கோட்டையன் கொஞ்சம் அடக்கி வாசித்தால் ரொம்ப நல்லது.
சம்பந்தமில்லாமல் எல்லா விஷயங்களிலும் செங்கோட் டையன் எப்போதும் ஆஜர் ஆவார். ஜெயலலிதா இருக்கும் போதே, சம்பந்தமில்லாமல் பல விஷயங்களில் ஆஜராகி மாட்டிக்கொள்வார்.
இப்போது, நான் மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பித் திருந்ததாக அவர் கூறியிருக்கிறார். நான் மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பித்திருந் தாலும் சரி, அல்லது வேறு ஏதாவது கல்லூரிக்கு விண்ணப்பித் திருந்தாலும் சரி, அதை அவர் நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலகி விடுகிறேன்.
அதேநேரத்தில் நிரூபிக்க முடியவில்லை என்றால், செங்கோட்டையன் அமைச்சர் பதவியில் இருந்து மட்டும் விலக தயாரா? சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் நடந்து கொண்டது அவரது தகுதியை இழக்க செய்திருக்கிறது. அவர் சைகை காட்டியது நிச்சயம் கண்டனத்துக் குரியது. இவ்வாறு அவர் கூறினார்.