தமிழகம்

மது விற்பனைதான் திமுக அரசின் சாதனை: நயினார் நாகேந்திரன், அன்புமணி விமர்சனம்

செய்திப்பிரிவு

சென்னை: பொங்​கல் பண்​டிகைக்கு ரூ.518 கோடிக்கு மது விற்​பனை செய்​தது​தான் திமுக அரசின் சாதனை என்று தமிழக பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், பாமக தலை​வர் அன்​புமணி ஆகியோர் விமர்​சித்​துள்​ளனர்.

நயி​னார் நாகேந்​திரன்: ‘போதை​யில்லா தமிழகத்தை உரு​வாக்​கு​வோம்’ என காணொளி வெளி​யிட்ட முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் ஆட்​சி​யில், பொங்​கல் பண்​டிகை​யையொட்டி தமிழகத்​தில் ரூ.518 கோடிக்​கும் அதி​க​மாக மது விற்​பனை நடந்​துள்​ளது. இது​தான் திமுக அரசின் சாதனை. பொங்​கல் பண்​டிகைக்கு ரூ.3,000 கொடுத்து அந்த பணத்தை டாஸ்​மாக் மூல​மாக வசூலித்​துள்ளது. போதை​யால் சமூகத்​தில் நிகழும் அசம்​பா​விதங்​களைத் தடுப்​ப​தை​விட டாஸ்​மாக் வரு​மானத்தை பெரி​தாக பார்க்​கும் ஒரு அரசு, இனியொரு முறை தப்​பித்​தவறி கூட தமிழகத்தை ஆளக்​கூ​டாது.

அன்​புமணி: மக்​கள் நலனுக்​காக துரும்​பைக்​கூட அசைக்​காத திமுக அரசு, ஆண்​டுக்கு ஆண்டு மக்​களை மேலும் மேலும் குடி​காரர்​களாக்கி மது வணி​கத்தை பெருக்​கு​வ​தில் மட்​டும்​தான் வெற்றி பெற்​றிருக்​கிறது.

இது சாதனை அல்ல. வேதனை. மு.க.ஸ்​டா​லின் தலை​மையி​லான திமுக அரசு எந்த நிலை​யிலும் மது​விலக்கை நோக்கி பயணிக்​க​வில்​லை. மக்​கள் விரோத அரசுக்​கு, வரும் தேர்​தலில் மக்​கள் மறக்க முடி​யாத பாடத்தை புகட்​டு​வார்​கள். இவ்​வாறு தெரி​வித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT