முத்தரசன் | கோப்புப்படம் 
தமிழகம்

அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட முத்தரசன் கோரிக்கை

செய்திப்பிரிவு

திருச்சி: காவிரி நீர் விவ​காரம் தொடர்​பாக விவா​திக்க தமிழக அரசு அனைத்துக் கட்சி மற்​றும் விவ​சாய சங்க பிர​தி​நி​தி​கள் அடங்​கிய கூட்​டத்தை கூட்ட வேண்​டும் என இந்​திய கம்​யூனிஸ்ட் மத்​திய கட்​டுப்​பாட்​டுக்​குழு உறுப்​பினர் முத்​தரசன் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

திருச்​சி​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியது: தமிழகத்​தில் இந்த ஆண்டு 6 லட்​சம் ஏக்​கரில் நடை​பெற வேண்​டிய குறுவை சாகுபடி பாதிக்​கப்​பட்​டுள்​ளது. காவிரி விவ​காரத்தை ஒட்​டுமொத்த தமிழகத்​தின் பிரச்​சினை​யாகக் கருத வேண்​டும்.

கர்​நாடகத்​தில் அனைத்​துக் கட்​சிகளும் ஒன்​றிணைந்து செயல்​படு​வதை​போல, தமிழகத்​தி​லும் ஒரு​மன​தான முடி​வெடுக்க முதல்​வர் உடனடி​யாக அனைத்​துக் கட்சி மற்​றும் விவ​சாய சங்க பிர​தி​நி​தி​கள் அடங்​கிய கூட்​டத்​தைக் கூட்ட வேண்​டும். பாஜக, காங்​கிரஸ் இரு​கட்​சிகளும் தமிழகத்​துக்கு துரோகம் விளைவிக்​கிறது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT