தமிழகம்

விஜய் பிரதமர் வேட்பாளரா? - கற்பனையான கேள்விக்கு பதில் கூற முடியாது: எம்பி சசிகாந்த் செந்தில்

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: அடுத்த மக்​கள​வைத் தேர்​தலில் விஜய்​தான் பிரதமர் வேட்​பாளரா என்ற கற்​பனை​யான கேள்விக்கு பதில் கூற முடி​யாது என திரு​வள்​ளூர் எம்​. பி. சசி​காந்த் செந்​தில் தெரி​வித்​தார்.

திரு​வேற்​காடு நகராட்சி 14-வது வார்டு சிவன் கோயில் தெரு​வில் திரு​வள்​ளூர் எம்பி தொகுதி மேம்​பாட்டு நிதியி​லிருந்து ரூ.18.50 லட்​சம் மதிப்​பில் புதிய ரேஷன் கடை, திரு​வேற்​காடு பேருந்து நிலைய வளாகத்​தில் ரூ.6.50 லட்​சம் செல​வில் உயர் கோபுர மின்​விளக்கு ஆகியவை புதி​தாக அமைக்​கப்​பட்​டன.

இவற்றை சசி​காந்த் செந்​தில், ஆவடி எம்​எல்ஏ ரமேஷ் குமார் ஆகியோர் மக்​களின் பயன்​பாட்​டுக்​காகத் தொடங்கி வைத்​தனர். பின்​னர் ஆவடி எம்​எல்ஏ ரமேஷ்கு​மார் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தவெக - காங்​கிரஸ் இடையே நல்ல இணக்​கம் உள்​ளது. எங்​கள் கூட்​டணி நல்ல கூட்​ட​ணி; இதை யாரும் அசைக்க முடி​யாது. திரு​வேற்​காடு வளர்ச்​சிக்​காக சட்​டப்​பேர​வை​யில் நாங்​கள் பேசுகிறோம். எதிர்க் கட்​சிகளின் கேள்வி​களுக்கு திங்​கள்​கிழமை (இன்​று) எங்​கள் தலை​வர் நல்ல பதிலடி கொடுப்​பார்.

எனவே திங்​கள்​கிழமை எப்​போது வரும் என்று மக்​கள் காத்​திருக்​கிறார்​கள். நல்ல ஆட்சி வேண்​டும்; எங்கு தவறு இருந்​தா​லும் தட்​டிக் கேட்​போம். திடக்​கழிவு மேலாண்​மைக்​கான ஒப்​பந்​தங்​கள் முடிவுக்கு வரவுள்​ளன. புதிய ஒப்​பந்​தங்​கள் வரும்​போது புதிய வழி​முறை​கள் உரு​வாக்​கப்​பட்டு செயல்​படுத்​தப்​படும்.‌ அதன் பிறகு குப்பை இல்லா நகரங்​கள் உரு​வாகும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

தொடர்ந்து பேசிய சசி​காந்த் செந்​தில், ``முதல்​வர் விஜய், காங்​கிரஸ் கட்​சி​யின் மூத்த தலை​வர் ராகுல் காந்தி ஆகிய இரு​வரும் நம்​பிக்கை தரக்​கூடிய தலை​வர்​களாக இருக்​கிறார்​கள். அவர்​களது தலை​மை​யில் இந்த நாடும், தமிழக​மும் நல்ல பாதை​யில் செல்​லும். மக்​கள் அனைத்​தை​யும் பார்த்​துக் கொண்​டு​தான் இருக்​கிறார்​கள். நிச்​ச​யம் நல்ல முடிவு எடுப்​பார்​கள்'' என்​றார்.

தொடர்ந்து செய்​தி​யாளர்​கள், `முதல்​வர் விஜய் தான் பிரதமர் வேட்​பாளர்' என்று தவெக​வினர் கூறி வரு​கின்​றனரே என்று கேட்​டதற்​கு, `கற்​பனை​யான கேள்விக்​கு பதில்​ கூற முடி​யாது' என்​று பதிலளித்​தார்​.

SCROLL FOR NEXT