தமிழகம்

பள்ளிவாசல்​ தாக்குதல் பின்னணி​ குறித்து விசாரணை: முதல்வர் விஜய்யிடம் நவாஸ்கனி எம்.பி. வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை​யில் வடபழனி, கோயம்​பேடு பகுதி​களில் உள்ள பள்ளிவாசல்கள் மீது நடத்​தப்​பட்ட தாக்​குதலின் பின்​னணி​யில் இருப்​பவர்​கள் குறித்து விசா​ரிக்க வேண்​டும் என்று நவாஸ் கனி எம்.பி. வலியுறுத்​தி​யுள்​ளார்.

தமிழ்​நாடு வக்ஃப் வாரியத் தலை​வ​ரான நவாஸ் கனி எம்.பி. சென்னை தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் விஜய்யை நேற்று சந்​தித்​தார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: கடந்த 14 -ம் தேதி வடபழனி பள்​ளிவாசலிலும், 26 -ம் தேதி கோயம்​பேடு பள்​ளிவாசலிலும் அடுத்​தடுத்து தாக்​குதல்​கள் நடந்​துள்​ளன.

இச்​சம்​பவங்​களில் தொடர்பு உடைய​வர்​கள் மீது கடும் நட​வடிக்கை எடுக்க வேண்​டும் என்று முதல்​வரை சந்​தித்து வலியுறுத்​தி​யுள்​ளேன்.

வடபழனி பள்​ளிவாசலில் தாக்​குதல் நடத்​தி​ய​வரை காவல் துறை​யினர் கைது செய்​துள்​ளனர்.

அவர் மனநலம் பாதிக்​கப்​பட்​ட​வர் என்​ப​தால், கீழ்ப்​பாக்​கம் மனநல மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்டு சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. சிகிச்சை முடிந்​தவுடன் அவரை சிறை​யில் அடைப்​ப​தாக காவல் துறை​யினர் உறுதி​யளித்​துள்​ளனர்.

அதேபோல, கோயம்​பேடு பள்​ளிவாசலில் தாக்​குதல் நடத்​தி​ய​வரை​யும் காவல் துறை​யினர் கைது செய்து, வழக்கு பதிவு செய்​துள்​ளனர்.

இரு சம்​பவங்​களி​லும் தொடர்பு உடைய​வர்​கள் மீது கடும் நட​வடிக்கை எடுக்க வேண்​டும். அவர்​களது பின்​னணி​யில் வேறு யாரேனும் உள்​ளனரா என்​பது குறித்​தும் விரிவாக விசா​ரணை நடத்த வேண்​டும். இவ்​வாறு அவர் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT