தமிழகம்

லண்டனில் ரூ.15,300 கோடி முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்து: முதல்வர் விஜய் நாளை சென்னை திரும்புகிறார்

செய்திப்பிரிவு

சென்னை: முதல்​வர் விஜய்​யின் லண்​டன் சுற்​றுப்​பயணத்​தில் முன்​னணி உலகளா​விய நிறு​வனங்​களு​டன் ரூ.15,300 கோடிக்​கும் அதி​க​மான முதலீடு​களுக்​கான புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின. லண்​டன் பயணத்தை முடித்​துக் கொண்டு முதல்​வர் விஜய் நாளை சென்னை திரும்​பு​கிறார்.

தமிழகத்​துக்கு வெளி​நாட்டு முதலீடு​களை ஈர்ப்​ப​தற்​காக முதல்​வர் விஜய் கடந்த 10-ம் தேதி லண்​டன் புறப்​பட்​டுச் சென்​றார். தமிழகத்​தில் உற்​பத்தி ஆலைகள், உலகளா​விய திறன் மையங்​கள் மற்​றும் ஆய்வு மேம்​பாட்டு வசதி​களை நிறு​வுவதற்​காக, தமிழக அரசின் வழி​காட்டி நிறு​வனத்​துக்​கும், பல்​வேறு பன்​னாட்டு நிறு​வனங்​களுக்​கும் இடையே செப்​டம்​பர் 14-ல் ஒப்​பந்​தங்​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன.

அதன்​படி 45-க்​கும் மேற்​பட்ட நாடு​களில் செயல்​படும் முன்​னணி பன்​னாட்டு நிறு​வன​மான ‘சம்​வர்​தனா மதர்​சன் இன்​டர்​நேஷனல் லிமிடெட்’, தனது பிரிட்​டன் மற்​றும் ஐரோப்​பிய கூட்டு நிறு​வனங்​களு​டன் இணைந்து தமிழகத்​தில் ரூ.11,000 கோடி முதலீடு செய்ய திட்​ட​மிட்​டுள்​ளது. இதன்​மூலம் சுமார் 7,000 பேருக்கு வேலை​வாய்ப்பு கிடைக்​கும். இது சர்​வ​தேச வாகன உற்​பத்தி சங்​கி​லி​யில் தமிழகத்​தின் இடத்தை அடுத்​தகட்​டத்​துக்கு கொண்டு செல்​லும்.

மேலும், ஐரோப்​பாவைச் சேர்ந்த முன்​னணி வாகன உதிரி​பாகங்​கள் தயாரிப்பு நிறு​வன​ம், இந்​தி​யா​வில் தனது முதல் புதிய உற்​பத்தி ஆலையை அமைக்க தமிழகத்​தை தேர்வு செய்​துள்​ளது. இதற்​கான ரூ.3,000 கோடி முதலீட்​டுக்​கான விருப்​பக் கடிதத்தை முதல்​வரிடம் அந்​நிறு​வனம் சமர்ப்​பித்​தது.

இதுத​விர, இங்கு உலகளாவிய திறன் மையத்தை அமைக்க ஏர்ன்​ஸ்ட் & யங் (Ernst & Young) நிறு​வனம் ஒப்​பந்​தம் செய்​துள்​ளது. இந்த மையம், சுமார் ரூ.1,000 கோடி முதலீட்​டில், சென்னை மவுண்ட் - பூந்​தமல்லி சாலைப் பகு​தி​யில் அமைய​வுள்ளது. இதில் 2 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாக்​கப்​படும்.

ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்​னாலஜி குழு​மம், எம்​பெடட் சிஸ்​டம்ஸ் மற்​றும் டிஜிட்​டல்​மய​மாக்​கல் துறை​களில் 600 வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​கும் நோக்​கில், சென்னை மற்​றும் திருச்​சி​யில் உள்ள தனது திறன் மையங்​களை விரிவுபடுத்​து​வதற்​கான ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட்​டுள்​ளது. பிரிட்​டனைத் தலை​மை​யிட​மாக கொண்ட வில்​சன் பவர் சொல்​யூஷன்ஸ் நிறு​வனம், மேம்​பட்ட மின்​மாற்​றி களை தயாரிப்​ப​தற்​காக திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் ரூ.300 கோடியை முதலீடு செய்​கிறது. இதனால் 400 புதிய வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாகும்.

இதுத​விர அசோக் லேலண்ட் நிர்​வாகத் தலை​வர் தீரஜ் இந்​துஜா, பினோலெக்ஸ் இண்​டஸ்ட்​ரீஸ் நிர்​வாகத் தலை​வர் பிர​காஷ் பி.​சாப்ரி உள்​ளிட்​டோரும் முதல்​வர் விஜய்யை சந்​தித்​தனர். அப்​போது கடந்த ஆகஸ்ட் மாதம் நடை​பெற்ற ‘வெற்​றி’ முதலீட்​டாளர்​கள் மாநாட்​டில் செய்​யப்​பட்ட ரூ.2,500 கோடி முதலீட்​டின் முன்​னேற்​றம் குறித்து அவர்​கள் விளக்​கினர். மேலும், தமிழகத்​தில் காற்​றாலை உள்​ளிட்ட புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்​தித் துறை​யில் முதலீடு​களை அதி​கரிப்​பது குறித்​தும், இந்த சந்​திப்​பில் ஆலோ​சிக்​கப்​பட்​டது.

தொடர்ந்து முதல்​வர் விஜய் பேசும்​போது, இந்த முதலீடு​கள் தமிழக இளைஞர்​களின் லட்​சி​யங்​களை பிர​திபலிப்பதாகவும் பிரிட்​டன்​-இந்​தியா பொருளா​தார மற்​றும் வர்த்தக ஒப்​பந்​தம் வாயி​லாக உரு​வாகும் வாய்ப்​பு​களைப் பயன்​படுத்​தி, தமிழகத்​தில் முதலீடு செய்ய இங்​கிலாந்து மற்​றும் ஐரோப்​பிய நிறு​வனங்​களுக்கு அழைப்பு விடுத்​தார்.

இதன் விளை​வாக பிரிட்​டன் வர்த்தக நிறு​வனங்​களுக்​கும், தமிழக ஜவுளி உற்​பத்​தி​யாளர்​களுக்​கும் இடையே கொள்​முதல் ஒப்​பந்​தங்​கள், ஓசூருக்கு இங்​கிலாந்து விண்​வெளி மற்​றும் பாது​காப்​புத் துறை பிர​தி​நி​தி​கள் வரு​கை, அக்​டோபரில் இங்​கிலாந்து மேயர் ஆணை​யத்​தின் பிர​தி​நி​தி​கள் சென்னை வரு​கை உள்​ளிட்ட பல்வேறு நடவடிக்​கைகள்​ முன்​னெடுக்​கப்​பட உள்​ள​தாக தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT