தமிழகம்

மாண்டேக் சிங் அலுவாலியா குழு: முதல்வர் விஜய்யுடன் ஆலோசனை

செய்திப்பிரிவு

சென்னை: பொருளா​தார நிபுணர் மாண்​டேக் சிங் அலு​வாலியா தலை​மையி​லான வரு​வாய் மேம்​பாட்​டுக் குழு​வினர் முதல்​வர் விஜய்யை தலை​மைச் செயல​கத்​தில் சந்​தித்து ஆலோ​சனை நடத்​தினர்.

தமிழகத்​தின் வரி மற்​றும் வரி அல்​லாத வரு​வாயை அதி​கரிக்​க​வும், வரு​வாய் கசிவு​களை தடுத்து நிதி ஆதா​ரங்​களை மேம்​படுத்​த​வும் வரு​வாய் மேம்​பாட்​டுக் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இதன் தலை​வ​ராக மத்​திய திட்​டக் குழு​வின் முன்​னாள் துணைத் தலை​வரும், பொருளா​தார நிபுணரு​மான மாண்​டேக் சிங் அலு​வாலியா நியமிக்​கப்​பட்​டார். உறுப்​பினர்​களாக பேராசிரியர் கே.பி.கிருஷ்ணன், வரி கொள்கை நிபுணர் அரவிந்த் மோடி, முன்​னாள் ஐஆர்​எஸ் அலு​வலர் நஜீப் ஷா, நிதித்​துறை செயலர் எம்​.ஏ.சித்​திக், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன இயக்​குநர் எம்​.சுரேஷ்​பாபு ஆகியோர் இடம்​பெற்​றுள்​ளனர்.

இந்​தக் குழு மாநிலத்​தின் சொந்த வரி வரு​வாயை அதி​கரிப்​ப​தற்​கான புதிய வழி​முறை​கள், வரியல்​லாத வரு​வாயை உயர்த்​தும் திட்​டங்​கள், புதிய வரு​வாய் ஆதா​ரங்​களை கண்​டறிதல், வரு​வாய் இழப்​பு​களை தடுக்​கும் சீர்​திருத்​தங்​கள் குறித்த ஆலோ​சனை​களை தமிழக அரசுக்கு 3 மாதங்​களில் வழங்​கும் என்று அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

இந்​நிலை​யில், மாண்​டேக் சிங் தலை​மையி​லான குழு​வினர் முதல்​வர் விஜய்யை தலை​மைச் செயல​கத்​தில் நேற்று சந்​தித்​தனர்.

அப்​போது மாநிலத்​தின் பொருளா​தார வளர்ச்​சிக்கு ஏற்ப வரு​வாயை சீரமைக்க வேண்​டியதன் அவசி​யம் மற்​றும் வரு​வாய் ஆதா​ரங்​களை வலுப்​படுத்​து​வது தொடர்​பாக விவா​திக்​கப்​பட்​ட​தாக​வும், செயல் திட்ட அறிக்கை தயாரிப்பு குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​ட​தாக​வும் கூறப்​படு​கிறது. நிதி​யமைச்​சர் மரிய​வில்​சன், தலை​மைச் செயலர் எம்​.​சாய்​கு​மார் உள்ளிட்டோர் உடனிருந்​தனர்​.

SCROLL FOR NEXT