சென்னை: மோட்டார் வாகன விபத்து மற்றும் தொழிலாளர் இழப்பீட்டு வழக்குகளில், நீதிமன்றங்களில் நீண்டகாலமாக உரிமை கோரப்படாமல் உள்ள தொகைகளைக் கண்டறியப் பிரத்யேக இணையதள வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதியை http://hcmadras.tn.gov.in/mact என்ற இணையதளத்தில் அணுகலாம். நீதிமன்ற இழப்பீட்டுத் தொகைகள் உரியவர்களைச் சென்றடைவதையும், நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதையும் இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.