பிரதமர் நரேந்​திர மோடி

 
தமிழகம்

​பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்

செய்திப்பிரிவு

தமிழக பாஜக பூத் கமிட்டி நிர்​வாகி​களு​டன் பிரதமர் மோடி இன்று கலந்​துரை​யாடு​கிறார். அப்​போது, தேர்​தல் பணி​கள் குறித்து அவர்​களுக்கு ஆலோ​சனை​களை வழங்​கு​கிறார்.

அதி​முக கூட்​ட​ணி​யில் பாஜக​வுக்கு 27 தொகு​தி​கள் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி மற்​றும் பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் அண்​ணா​மலை உள்​ளிட்ட முக்​கிய தலை​வர்​கள் கூட்​டணி வேட்​பாளர்​களை ஆதரித்து மாநிலம் முழு​வதும் தீவிரப் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

          

மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயல் தமிழகத்​திலேயே முகாமிட்டு தேர்​தல் பணி​களை ஒருங்​கிணைத்து வரு​வது, இத்​தேர்​தலில் பாஜக காட்​டும் தீவிரத்தை உணர்த்​துகிறது. பாஜக தேசி​யத் தலை​வர் நிதின் நபின் இரண்டு நாள் பயண​மாகத் தமிழகம் வந்​துள்ள நிலை​யில், வேட்​பாளர்​களை ஆதரித்து தீவிர பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டுள்​ளார். தேர்​தலுக்கு இன்​னும் 10 நாட்​களே உள்ள நிலை​யில், பிரதமர் நரேந்​திர மோடி ஏப்​ரல் 15-ம் தேதி நாகர்​கோ​விலில் ரோடு ஷோ நடத்​துகிறார். 18-ம் தேதி கோவை​யில் பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் பேசுகிறார்.

அவரைத் தொடர்ந்து மத்​திய அமைச்​சர்​கள் அமித் ஷா மற்​றும் ராஜ்​நாத் சிங் ஆகியோ​ரும் தமிழகம் வரவுள்​ளனர். இது கூட்​ட​ணித் தொண்​டர்​களிடையே பெரும் உற்​சாகத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இதற்​கிடை​யில், இன்று (13-ம் தேதி) மாலை 4 மணிக்​கு, தமிழக பாஜக பூத் கமிட்டி நிர்​வாகி​களு​டன் பிரதமர் மோடி காணொலி வாயி​லாகக் கலந்​துரை​யாடு​கிறார். ‘எனது பூத் - வலிமை​யான பூத்’ என்ற தலைப்​பில் நடை​பெறும் இந்த நிகழ்​வில் சுமார் 5 லட்​சம் நிர்​வாகி​கள் பங்​கேற்​பார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இது குறித்து பிரதமர் மோடி தனது ‘எக்​ஸ்’ பதி​வில், “தி​முக​வின் மோச​மான நிர்​வாகத்தை அம்​பலப்​படுத்​தி, மாநில வளர்ச்​சிக்​கான தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் தொலைநோக்​குப் பார்​வையை விரி​வாக எடுத்​துரைத்த தமிழக பாஜக செயல்​வீரர்​களை எண்ணி நான் மிக​வும் பெரு​மைப்​படு​கிறேன். 13-ம் தேதி மாலை நடை​பெறும் ‘எனது வாக்​குச்​சாவடி, வலிமை​யான வாக்​குச்​சாவடி கலந்​துரை​யாடல்’ நிகழ்ச்​சி​யின் போது, கடின​மாக உழைக்​கும் நமது செயல்​வீரர்​களு​டன் நான் உரை​யாட​விருக்​கிறேன்​” என குறிப்​பிட்​டுள்​ளார்​.

SCROLL FOR NEXT