சென்னை போருரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிக்கலான அறுவை சிகிச்சை களை மேற்கொள்வதற்காக, நவீன ரோபோடிக் தொழில்நுட்ப கருவியின் பயன்பாட்டை, ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம் தொடங்கி வைத்தார். துணைவேந்தர் மருத்துவர் உமா சேகர், இணை துணைவேந்தர் மருத்துவர் மகேஷ் வக்கமுடி, மருத்துவக் கல்லூரி தலைவர் மருத்துவர் கே.பாலாஜி சிங், பதிவாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார், மருத்துவ இயக்குநர் மருத்துவர் ஆர்.பி.சுதாகர் சிங், மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் பி.சுரேந்திரன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.

 
தமிழகம்

நவீன ரோபோடிக் அறுவை சிகிச்சை தொழில்நுட்பம்: போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அறிமுகம்

செய்திப்பிரிவு

சென்னை: ​போருரில் உள்ள ஸ்ரீராமச்​சந்​திரா மருத்​து​வ​மனை​யில் சிக்​கலான அறுவை சிகிச்​சைகளை மேற்​கொள்​வதற்​காக, நவீன ரோபோடிக் தொழில்​நுட்​பம் அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ள தாவது: ஸ்ரீராமச்​சந்​திரா உயர் கல்வி மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனத்​தின் வேந்​தர் வி.ஆர்​.வெங்​க​டாசலம், ‘டா வின்சி எக்​ஸ்ஐ அட்​வான்​ஸ்டு ரோபோடிக் சர்​ஜிக்​கல் சிஸ்​டம்’ என்ற ரோபோடிக் தொழில்​நுட்ப கரு​வி​யின் பயன்​பாட்டை தொடங்கி வைத்​தார்.

          

இந்த நிகழ்​வில் ஸ்ரீராமச்​சந்​திரா கல்வி மற்​றும் மருத்​துவ அறக்​கட்​டளை அறங்​காவலர் சம்​யுக்தா வெங்​க​டாசலம், துணை வேந்​தர் மருத்​து​வர் உமா சேகர், இணை துணைவேந்​தர் மருத்​து​வர் மகேஷ் வக்​க​முடி, மருத்​து​வக் கல்​லூரி தலை​வர் மருத்​து​வர் கே.​பாலாஜி சிங், பதி​வாளர் மருத்​து​வர் எஸ்​.செந்​தில் குமார்.

மருத்​துவ இயக்​குநர் மருத்​து​வர் ஆர்​.பி.சு​தாகர் சிங், மருத்​துவ கண்​காணிப்​பாளர் மருத்​து​வர் பி.சுரேந்​திரன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர். இந்த ரோபோடிக் கரு​வி​யில் அறுவை சிகிச்சை நிபுணருக்​கான கட்​டுப்​பாட்டு கன்​சோல், நோயாளி​யின் பக்​கத்​தில் 3 முதல் 4 ரோபோடிக் கரங்​களை கொண்ட கார்ட் மற்​றும் 3டி எச்டி மற்​றும் அறுவை சிகிச்சை நிபுணரின் கை அசைவு​களை உடனுக்​குடன் துல்​லிய​மாக பிர​திபலிக்க ஃபோர்ஸ் ஃபீட்​பேக் உயர்தொழில்​நுட்​பம் உள்​ளது.

சிக்கலான அறுவை சிகிச்சைகள் சாதாரண அறுவை சிகிச்​சை​யுடன் ஒப்​பிடு​கை​யில் இந்த ரோபோடிக் தொழில்​நுட்​பத்​தால் நோயாளி​கள் விரை​வாக குணமடைய​லாம்.

சிறிய அளவு காயங்​கள், குறைந்த நோய் தொற்​றுடன், மருத்​து​வ​மனை​யில் குறைந்த நாட்​கள் இருப்​பது போன்ற பலன்​கள் கிடைக்​கின்​றன. புரோஸ்​டேட் அகற்​று​தல், கருப்பை அகற்​று​தல், கொலோரெக்​டல் அறுவை சிகிச்சை மற்​றும் இதய மார்பு அறுவை சிகிச்சை உள்​ளிட்ட பல சிக்​கலான அறுவை சிகிச்​சைகளை துல்​லிய​மாக செய்​வதற்கு பயன்​படு​கிறது என்று தெரி​விக்கப்பட்டுள்​ளது.

SCROLL FOR NEXT