தமிழகம்

சாலை விதிமீறலை துல்லியமாக அறிய போக்குவரத்து போலீஸாரின் சட்டை பட்டனில் பொருத்தப்படும் நவீன கேமரா

கட்டுப்பாட்டு அறையில் இருந்தே கண்காணிக்க முடியும்

இ.ராமகிருஷ்ணன்

சென்னை: ​போக்​கு​வரத்து போலீ​ஸாரின் நடவடிக்​கை, வாகன ஓட்​டிகளின் செயல்​பாடு​களை துல்​லிய​மாக அறிந்து கொள்ள வசதி​யாக, வாகன சோதனை​யில் ஈடு​படும் போக்​கு​வரத்து போலீ​ஸாருக்கு நவீன ‘பாடி வோன் கேம​ரா’ (Body worn camera) விரை​வில் வழங்​கப்பட உள்​ளது. இதற்​கான சோதனை ஓட்​டம் தொடங்கி உள்​ளது.

போதை​யில் வாக​னம் ஓட்​டு​வோர், அதிவேக​மாக வாக​னங்​களை இயக்​கு​வோர், வாகன பந்​த​யத்​தில் ஈடு​படு​பவர்​கள், ஒரு வழிப்​பாதை​யில் எதிர் திசை​யில் தடையை மீறி செல்​வோர், ஒரே இருசக்கர வாக​னத்​தில் 2 பேருக்கு மேல் செல்​வோர், ஹெல்​மெட் அணி​யாமல் இருசக்கர வாக​னம் ஓட்​டு​வோர், சீட் பெல்ட் அணி​யாமல் காரை ஓட்​டிச் செல்​வது உட்பட பல்​வேறு வகை​யான போக்​கு​வரத்து விதி​களை மீறு​வோருக்கு போக்​கு​வரத்து போலீ​ஸார் அபராதம் விதிக்​கின்​றனர்.

இந்த அபராதங்​களை நேரடி​யாக களத்​தில் நின்​றும், ஆங்​காங்கே உள்ள கேம​ராக்​களில் பதி​வாகும் காட்​சிகளை கட்​டுப்​பாட்டு அறை​யில் இருந்​த​வாறு கண்​காணித்​தும் போக்​கு​வரத்து போலீ​ஸார் அபராதம் விதிக்​கின்​றனர். தற்​போது, ‘ஏஐ’ தொழில் நுட்​பத்​துட​னும் அதிக திறன் கொண்ட கேமராக்கள் நிறு​வப்​பட்​டுள்​ளன. இதன்​மூல​மும் விதி​மீறல் வாகன ஓட்​டிகள் கண்​காணிக்​கப்​படு​கின்​றனர்.

இந்த கண்​காணிப்பு கேமராக்கள் இல்​லாத சாலைகளில் விதி​களை மீறு​வோருக்கு அபராதம் வசூலிக்​கும்​போது சம்​பந்​தப்​பட்ட போக்​கு​வரத்து போலீ​ஸாருக்​கும் வாகன ஓட்​டிகளுக்​கும் பல நேரங்​களில் தகராறு ஏற்​படு​கிறது. இதற்கு முற்​றுப்​புள்ளி வைக்​கும் வகை​யில் போக்​கு​வரத்து போலீ​ஸாருக்கு ‘பாடி வோன் கேமரா’ வழங்​கப்​பட்​டது.

இந்த கேமராக்களை போக்​கு​வரத்தை ஒழுங்​குபடுத்​தும் போலீ​ஸார் தங்​களது சீருடை​யில் நெஞ்சு பகு​தி​யில் உள்ள சட்டை பட்​டனில் மாட்டி வைத்​துக் கொள்​வார்​கள். இதன் மூலம் போக்​கு​வரத்து போலீ​ஸார் மற்​றும் வாகன ஓட்​டிகளின் உரை​யாடல்​கள் அந்த பாடி ஒன் கேமராவில் தெளி​வாக பதி​வாகி விடும். யார் மீது தவறு உள்​ளது என்​றும் தெரிந்து விடும்.

ஆனால், இந்த கேமரா பயன்​பாட்​டில் இருக்​கும் போது அதி​க​மாக சூடா​வ​தாக​வும், போது​மான நேரம் சார்ஜ் நிற்​பது இல்லை என்ற குற்​றச்​சாட்டும் எழுந்​தது. இதை போக்​கும் வகை​யில் மேம்​படுத்​தப்​பட்ட ‘பாடி வோன் கேமரா’ சென்னை போக்​கு​வரத்து காவலில் விரை​வில் அமல்​படுத்​தப்பட உள்​ளது. தற்​போது தின​மும் 5 போக்​கு​வரத்து உதவி ஆய்​வாளர்​களுக்கு தலா ஒன்று வீதம் வழங்​கப்​பட்டு சோதனை ஓட்​டம் தொடங்கி உள்​ளது.

இதில் பதி​வாகும் நிகழ்​வு​களை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் உள்ள கட்​டுப்​பாட்டு அறை​யில் இருந்​த​வாறு அதி​காரி​கள் நேரடி​யாக கண்​காணிக்க முடி​யும். மேலும், 2 நாட்​கள் முழு​மை​யாக சார்ஜ் நிற்​கும். இது தங்​களுக்கு மிக​வும் பயனுள்​ள​தாக இருப்​ப​தாக போக்​கு​வரத்து போலீ​ஸார் மகிழ்ச்சி தெரி​வித்​துள்​ளனர்.

இந்த மேம்​படுத்​தப்​பட்ட கேமராக்கள் வாகன சோதனை​யில் ஈடு​படும் அனைத்து போக்​கு​வரத்து போலீ​ஸாருக்​கும் விரை​வில்​ வழங்​கப்​பட உள்​ள​தாக போலீஸ்​ அதி​காரி​கள்​ தரப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT