படம்: ம.பிரபு
சென்னை: தமிழகத்தில் இன்று (ஆக.26) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
27-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், 28-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கடலூர், விழுப்புரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் லே சான மழை பெய்யக்கூடும்.
29 முதல் 31-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். இத்தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை யில் தெரிவித்துள்ளது.