தமிழகம்

7 மாவட்டங்களில் மிதமான பனிமூட்டம் நிலவும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: வேலூர், ராணிப்​பேட்டை உள்​ளிட்ட 7 மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இன்​றும், நாளை​யும் (பிப்​.11, 12) அதி​காலை நேரத்​தில் மித​மான பனிமூட்​டம் நில​வும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி வி.ஆர்​.துரை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: தமிழகம், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களில் இன்​றும், நாளை​யும் வறண்ட வானிலை நில​வும். வேலூர், ராணிப்​பேட்​டை, திருப்​பத்​தூர், கிருஷ்ணகிரி, தரு​மபுரி, நீல​கிரி, திண்​டுக்​கல் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் அதி​காலை நேரத்​தில் மித​மான பனிமூட்​டம் காணப்​படும்.

          

சென்​னை, திரு​வள்​ளூர், காஞ்சிபுரம், செங்​கல்​பட்​டு, சேலம், ஈரோடு மற்​றும் நாமக்​கல் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் அதி​காலை நேரத்​தில் லேசான பனிமூட்​டம் இருக்கும்.

வரும் 13-ம் தேதி தென் தமிழகம் மற்​றும் டெல்டா மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும், காரைக்​கால் பகு​திகளி​லும் லேசான மழை பெய்​யக்​கூடும். அதே நேரத்​தில், கிருஷ்ணகிரி, தரு​மபுரி, சேலம், ஈரோடு, திண்​டுக்​கல், நீல​கிரி, நாமக்​கல் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் அதி​காலையில் மித​மான பனிமூட்​டம் காணப்​படும். சென்​னை, திருவள்ளூர், காஞ்​சிபுரம், செங்​கை, ராணிப்பேட்​டை,வேலூர், திருப்பத்​தூர் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் அதி​காலை லேசான பனிமூட்​டம் இருக்கும்.

தென்​கிழக்கு வங்​கக் கடலின் சில பகு​தி​கள், இந்​தி​யப் பெருங்​கடல் கிழக்​கு பகு​தி​, தென்​மேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் சூறாவளிக் காற்று வீசும் என்​ப​தால், மீனவர்​கள் இன்​றும், நாளை​யும் அந்​தப் பகு​தி​களுக்குச் செல்ல வேண்​டாம்.

SCROLL FOR NEXT