தமிழகம்

ரூ.50 ஆயிரம் செலுத்திய 60 பேருக்கு திருப்பி தர மாட்டோம்: தேர்தலில் போட்டியிடாத மநீம விளக்கம்

செய்திப்பிரிவு

விருப்ப மனு கட்​ட​ணம் ரூ.50 ஆயிரம் திருப்​பித் தரக்​கூடியது அல்ல. 60 பேர் கட்​டிய விருப்​பமனு தொகை கட்சி நிதிக்கு சென்று விட்​டது என்று மக்கள் நீதி மய்யம் நிர்​வாகி​கள் விளக்​கம் அளித்​தனர்.

தேர்​தலில் போட்​டி​யிட விரும்​பும் தொண்​டர்​கள் மற்​றும் நிர்​வாகி​களிடம் கட்சி சார்​பில் விருப்ப மனு கட்​ட​ணம் பெறப்​படு​வது வழக்​கம். அந்த வகை​யில், திமுக கூட்​ட​ணி​யில் இடம்​பெற்​றுள்ள கமல்​ஹாசன் தலை​மையி​லான மக்​கள் நீதி மய்​யம் கட்சி சார்​பில் விருப்ப மனு கட்​ட​ணம் ரூ.50 ஆயிரம் என நிர்​ண​யிக்​கப்​பட்​டிருந்​தது. தேர்​தலில் போட்​டி​யிட வாய்ப்பு கிடைக்​கும் என்று கருதி மநீம தொண்​டர்​கள், நிர்​வாகி​கள் 60 பேர் விருப்ப மனு கட்​ட​ணம் செலுத்​தினர்.

ஆனால், திமுக தொகுதி பங்​கீட்​டுக் குழு​வுடன் 3 சுற்று பேச்​சு​வார்த்தை முடிவடைந்த நிலை​யில் கட்​சி​யின் சொந்த சின்​னத்​தில் போட்​டி​யிட வாய்ப்பு கிடைக்​காத​தால் தேர்​தலில் கட்சி போட்​டி​யிட​வில்லை என்று மநீம தலை​வர் கமல்​ஹாசன் அறி​வித்​தார்.

          

இதனால், தேர்​தலில் போட்​டி​யிடலாம் என்று விருப்ப மனு கட்​ட​ணம் செலுத்​திய கட்சி நிர்​வாகி​களும் தொண்​டர்​களும் அதிர்ச்சி அடைந்​தனர். இந்த சூழலில், மநீம தேர்​தலில் போட்​டி​யி​டாத​தால் விருப்ப மனு கட்​ட​ணத்தை திருப்​பித்தர வேண்​டும் என்று கட்​ட​ணத்தை செலுத்​திய நிர்​வாகி​கள் கோரிக்கை வைத்​துள்​ள​தாக சமூக ஊடகங்​களில் செய்​தி​கள் வெளி​யா​யின. இதுதொடர்​பாக மநீம நிர்​வாகி​களிடம் கேட்​ட​போது, “விருப்ப மனு கட்​ட​ணம் என்​பது திருப்​பித்​தரக்​கூடிய கட்​ட​ணம் அல்ல (Non--refundable) என்​பதும் அந்த கட்​ட​ணம் கட்சி நிதி​யாக கருதப்​படும் என்​பதும் அனை​வருக்​கும் நன்கு தெரி​யும்.

அந்த வகை​யில், தேர்​தலில் கட்சி சார்​பில் போட்​டி​யிட 60 பேர் விருப்ப மனு கட்​ட​ணம் செலுத்​தி​யிருந்​தனர். அந்த கட்​ட​ணம் கட்சி நிதிக்கு சென்​று​விட்​டது. விருப்ப மனு கட்​ட​ணம் செலுத்​திய எந்த தொண்​டரும், நிர்​வாகி​யும் அதை திரும்ப தரு​மாறு கட்சி தலை​மை​யிடம் எந்த கோரிக்​கை​யும் வைக்​க​வில்​லை. ஆனால், எதிர்க்​கட்​சிகளைச்​ சேர்​ந்​தவர்​கள்​ திட்​ட​மிட்​டு இதுதொடர்​​பாக தவறான தகவல்​களை பரப்​பு​கிறார்​கள்​” என்​று விளக்​கம்​ அளித்​தனர்​.

SCROLL FOR NEXT