முதல்வர் ஸ்டாலின் நேற்று கொளத்தூர் தொகுதிக்குச் சென்று, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். உடன் கண்கலங்கிய நிலையில் சேகர்பாபு. | படம்: ம.பிரபு |

 
தமிழகம்

கொளத்தூர் தொகுதியில் திறந்த வாகனத்தில் சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்

கண் கலங்கிய தொண்டர்கள், மக்கள்

செய்திப்பிரிவு

சென்னை: கொளத்தூர் தொகுதி மக்​களுக்கு திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று நன்றி தெரி​வித்​தார். திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், ``தேர்​தலில் தோல்​வி​யுற்​றாலும், நமக்கு வாக்​களித்த மக்​களுக்கு நேரடி​யாக சென்று நன்றி தெரிவிக்​கும் கடமையை எப்​போதும் செய்து வருகிறோம்.

அந்த வகை​யில் திமுக வேட்​பாளர்​கள் அனை​வரும், உடனடி​யாக வாக்​களித்த மக்​களை சந்​தித்து நன்றி தெரிவிக்க வேண்​டும்'' என உத்​தர​விட்​டிருந்​தார். அதற்கு முன் மாதிரி​யாக நேற்று மாலை அவரே கொளத்​தூர் தொகுதி மக்​களுக்கு நேரில் சென்று நன்றி தெரி​வித்​தார்.

மேயர் சிட்​டி​பாபு பாலத்​தில் தொடங்கி பெர​வள்​ளூர் காம​ராஜர் சிலை வரை 2 கி.மீ.திறந்த வெளி வாக​னத்​தில் சென்ற ஸ்டா​லின், சாலை​யில் இருபக்​க​மும் கூடி​யிருந்த திமுக தொண்​டர்​கள் மற்​றும் மக்​களுக்கு நன்றி தெரி​வித்​தார்.

ஏராள​மான இளைஞர்​கள், பெண்​கள் கண்​ணீருடன் அவரை வரவேற்​றனர். அப்​போது அவருடன் இருந்த சேகர்​பாபு அழுதநிலை​யில், திமுக தொண்​டர்​களும் பலர் கண்​ணீர்​விட்டு அழுதனர். மக்​களின் அழுகையை பார்த்த ஸ்​டா​லின், தொண்​டர்​களிடம் அழவேண்​டாம் எனக் கூறி​னார்.

இதனிடையே, அவர் வெளி​யிட்ட சமுக வலைதள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: கொளத்​தூருக்​கும் எனக்​கு​மான உறவு தேர்​தல் வெற்​றி, தோல்வி​களைக் கடந்தது. 15 ஆண்​டு​காலம் எனக்கு ஆதரவு நல்​கிய​வர்​கள் கொளத்​தூர் தொகுதி மக்​கள். அதில், 10 ஆண்​டு​கள் எதிர்க்​கட்சி வரிசை​யில் இருந்​தும், 5 ஆண்​டு​கள் ஆளும்​கட்​சி​யாக​வும் என்​னால் இயன்ற அனைத்​துத் திட்​டங்​களை​யும் கொளத்​தூருக்கு கொண்டு வந்து நிறைவேற்​றினேன்.

தமிழகத்​தின் மாடல் தொகு​தி​யாக அனைத்து உட்​கட்​டமைப்பு வசதி​களை​யும் செய்து கொடுத்​து, எந்​தக் கோரிக்​கை​யா​னாலும் நிறைவேற்​றிக் கொடுத்த பெரு​மிதத்​தோடே மக்​களை நேரில் சந்​தித்து நன்றி தெரி​வித்​தேன்.

ஒவ்​வொரு தெரு​விலும் சென்​ற​போது அங்கு நான் உரு​வாக்​கிய விளை​யாட்​டரங்​கம், பூங்​கா, முதல்​வர் படைப்​பகம், நூல​கம், திருமண மாளி​கை, பேருந்து நிலை​யம், மருத்​து​வ​மனை, பள்​ளிக்​கூடங்​கள், கல்​லூரி​ போன்​றவற்​றைக் கண்டு என் கடமையை சரிவர ஆற்​றி​யிருப்​ப​தில் மனநிறைவு கொண்​டேன்.

உணர்ச்​சிப் பெருக்​கோடு என் நன்​றியை ஏற்​றுக்​கொண்ட மக்​களுக்​காக என்​றும் நான் உண்​மை​யாக உழைப்​பேன் என்று கூறியுள்ளார். அடுத்​தடுத்த நாட்​களி​லும் தொகு​தி​யில் அனைத்து பகு​தி​களுக்​கும் சென்று மக்​களுக்கு ஸ்​டா​லின்​ நன்​றி தெரிவிக்​க உள்​ளார்​.

SCROLL FOR NEXT